மேற்கு தொடர்ச்சி மலையில் கனமழை அமராவதி அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
மேற்கு தொடர்ச்சிமலையில் பெய்த கன மழையால் அமராவதி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தளி,
உடுமலையை அடுத்த மேற்கு தொடர்ச்சிமலை அடிவாரத்தில் அமராவதி அணை உள்ளது. இந்த அணைக்கு ஆறுகள் மற்றும் ஓடைகள் மூலமாக மழைக் காலங்களில் நீர்வரத்து ஏற்படுகின்றது. அதை அடிப்படையாக கொண்டு திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் சுமார் 55 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. பழைய ஆயக்கட்டு பாசனத்திற்கு அமராவதி ஆற்றிலும், புதிய ஆயக்கட்டு பாசனத்திற்கு பிரதான கால்வாய் மூலமாகவும் அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்படுகிறது. அத்துடன் சுற்றுப்புற கிராம மக்கள் பயன்பெறும் வகையில் குடிநீர் திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பாக மேற்கு தொடர்ச்சிமலை பகுதியில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்தது. அதைத்தொடர்ந்து அமராவதி அணையின் முக்கிய நீராதாரங்களான பாம்பாறு, தேனாறு, சின்னாறு உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதன் காரணமாக அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வந்தது. அத்துடன் அணை அதன் முழுகொள்ளளவை எட்டியது. அதைத்தொடர்ந்து கடந்த மாதம் அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்பட்டது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு முதல் மேற்கு தொடர்ச்சிமலையில் கன மழை பெய்து வருகிறது. இதன்காரணமாக அணைக்கு வந்து கொண்டிருந்த நீர்வரத்து மீண்டும் அதிகரித்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் நேற்று மேற்கு தொடர்ச்சிமலைப் பகுதியில் வானம் தொடர்ந்து மேகமூட்டமாக காணப்பட்டதுடன் கனமழை பெய்வதற்கான சூழல் நிலவி வருகிறது. இதனால் அணையின் நீர் வரத்தை பொதுப்பணித்துறை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.
நேற்றைய காலை நேர நிலவரப்படி அணையின் மொத்த நீர் இருப்பில் 79.99 அடி உயரத்திற்கு தண்ணீர் உள்ளது. அணைக்கு வினாடிக்கு ஆயிரத்து 391 கன அடி தண்ணீர் அணைக்கு வந்து கொண்டுள்ளது. அணையிலிருந்து வினாடிக்கு 55 கனஅடி வீதம் தண்ணீர் பிரதான கால்வாயில் வெளியேற்றப்படுகிறது.

Related Tags :
Next Story