சிறுமியை திருமணம் செய்த கட்டிட காண்டிராக்டர் கைது


சிறுமியை திருமணம் செய்த கட்டிட காண்டிராக்டர் கைது
x
தினத்தந்தி 5 Oct 2018 3:45 AM IST (Updated: 5 Oct 2018 3:28 AM IST)
t-max-icont-min-icon

சேந்தமங்கலம் அருகே சிறுமியை திருமணம் செய்த கட்டிட காண்டிராக்டர் கைது செய்யப்பட்டார். உடந்தையாக இருந்த அவரது தாய், தந்தை உள்பட 5 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

சேந்தமங்கலம்,

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகே உள்ள மலைவேப்பன்குட்டை ஆனாங்காடு பகுதியை சேர்ந்தவர் கனகராஜ் (வயது 27). இவர் சென்னையில் வீடு கட்டிக்கொடுக்கும் காண்டிராக்டராக வேலை பார்த்து வருகிறார். இவர் கடந்த 15 நாட்களுக்கு முன்பு மலைவேப்பன்குட்டையை சேர்ந்த 16 வயது சிறுமியை திருமணம் செய்து கொண்டார்.

இது குறித்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு மையத்திற்கு தெரியவந்தது. அதை தொடர்ந்து குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்் ரஞ்சிதாபிரியா பேளுக்குறிச்சி போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் மலைவேப்பன்குட்டைக்கு சென்று விசாரணை நடத்தியதில் சிறுமிக்கு திருமணம் நடந்தது தெரியவந்தது.

இதையடுத்து திருமண வயது பூர்த்தியடையாமல் இருந்த சிறுமியை திருமணம் செய்ததற்காக காண்டிராக்டர் கனகராஜை போலீசார் கைது செய்தனர்.

மேலும் அந்த திருமணத்திற்கு உடந்தையாக இருந்ததாக அவரது தாய் சரோஜா, தந்தை பெருமாள் மற்றும் உறவினர்களான நாகப்பன், லதா, ராணி ஆகிய 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர். அந்த சிறுமியை நாமக்கல் காப்பகத்தில் ஆலோசனை வழங்குவதற்காக கொண்டு சென்றுள்ளனர்.

இந்த சம்பவத்தால் நேற்று மலைவேப்பன்குட்டை பகுதியில் பரபரப்பு காணப்பட்டது.

Next Story