ரெயில் வாசலில் பயணித்து தவறி விழுந்த இளம்பெண் மீது வழக்குப்பதிவு
ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்து உயிர்தப்பிய இளம்பெண் மீது, ரெயில் வாசலில் நின்று பயணம் செய்ததாக ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மும்பை,
தானே மாவட்டம் திவா பகுதியை சேர்ந்த 17 வயது இளம்பெண் சம்பவத்தன்று கல்யாண் நோக்கி செல்லும் ஸ்லோ மின்சார ரெயிலில் வாசற்படியில் நின்று கொண்டு பயணம் செய்தார்.
அந்த ரெயில் காட்கோபர் - விக்ரோலி இடைேய சென்று கொண்டிருந்த போது, துரதிருஷ்டவசமாக கால் தவறி ஓடும் ரெயிலில் இருந்து கீழே விழுந்து தொங்கினார். இதை பார்த்ததும் அருகில் நின்ற ஆண் பயணி ஒருவர் நொடிப்ெபாழுதில் துரிதமாக செயல்பட்டு அப்பெண்ணின் கையை எட்டி பிடித்து ரெயிலுக்குள் இழுத்தார். இதற்கு மற்றொரு ஆண் பயணியும் உதவினார்.
ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்தபோது சக பயணியால் இளம்பெண் உயிர் தப்பினார். அவர் காப்பாற்றப்படும் வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்தநிலையில் ரெயிலில் வாசலில் நின்று பயணம் செய்ததற்காக இளம்பெண் மீது ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். அவர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் இளம்பெண்ணுக்கு 3 மாதம் ஜெயில் அல்லது ரூ.5 ஆயிரம் அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படலாம்.
இதுகுறித்து ஓடும் ரெயிலில் இருந்து விழுந்த இளம்பெண் கூறியதாவது:-
நான் தவறு எதுவும் செய்யவில்லை. ரெயில்வே நிர்வாகம் கதவுடன் கூடிய ரெயிலை இயக்கவேண்டும். யார் நான் கீழே விழுந்ததை படம் பிடித்து வெளியிட்டார்கள் என்பது தெரியவில்லை. இது தவறான செயல்.
இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story