ரூ.97 கோடி செலவில் மும்பை மீன் இறங்குதளம் நவீனமயமாக்கும் பணி


ரூ.97 கோடி செலவில் மும்பை மீன் இறங்குதளம் நவீனமயமாக்கும் பணி
x
தினத்தந்தி 4 Oct 2018 11:37 PM GMT (Updated: 4 Oct 2018 11:37 PM GMT)

ரூ.97 கோடி செலவில் மும்பை மீன் இறங்குதளத்தை நவீனமயமாக்கும் பணிக்கு மாநில அரசு ஒப்புதல் அளித்து உள்ளது.

மும்பை,

மும்பை மஜ்காவில் உள்ள சசூன் டாக் மீன் இறங்குதளம் 6 ஹெக்டேர் பரப்பளவில் பரந்து விரிந்து காணப்படுகிறது. இந்த மீன் இறங்குதளத்தில் இருந்து தினசரி ரூ.2 கோடி அளவுக்கு மீன்கள் மொத்த விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

143 ஆண்டுகள் பழமையான இந்த மீன் இறங்குதளம் ரூ.96 கோடியே 92 லட்சம் செலவில் நவீன மயமாக்கப்பட உள்ளது.

இதற்கான பணிகளை மாநில மீன்வள கழகம் மற்றும் மும்பை துறைமுக அறக்கட்டளை ஆகியவை இணைந்து மேற்கொள்கின்றன.

சசூன் டாக் மீன் இறங்குதளத்தை நவீனமயமாக்கும் திட்டத்துக்கு மாநில அரசு ஒப்புதல் அளித்து உள்ளது.

இதுபற்றி மீன்வளத்துறை மந்திரி மகாதேவ் ஜான்கர் கூறுகையில், ‘‘நவீனமயமாக்கப்படும் சசூன் டாக் மீன் இறங்குதளத்தில் ஏ.சி. வசதி கொண்ட மார்க்கெட்டுகள், ஏல அரங்குகள் அமைக்கப்படும். இதுதவிர கடலில் இருந்து கொண்டு வரப்படும் மீன்களை கையாளுவதற்கு நவீன தொழில்நுட்பங்களை கொண்ட உபகரணங்கள் பயன்படுத்தப்படும்.

உணவகம் உள்ளிட்ட வசதிகளும் ஏற்படுத்தி தரப்படும். இதன் மூலம் மீன் இறங்குதளத்தில் பணிபுரியும் 10 ஆயிரம் மீனவர்கள் பயன்பெறுவார்கள்’’ என்றார்.


Next Story