நள்ளிரவில் வீடுபுகுந்து போலீஸ் ஏட்டு மனைவியிடம் 10 பவுன் நகை பறிப்பு மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
கோவில்பட்டியில் நள்ளிரவில் வீடு புகுந்து போலீஸ் ஏட்டு மனைவியிடம் 10 பவுன் நகையை பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
கோவில்பட்டி,
கோவில்பட்டியில் நள்ளிரவில் வீடு புகுந்து போலீஸ் ஏட்டு மனைவியிடம் 10 பவுன் நகையை பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
போலீஸ் ஏட்டுகோவில்பட்டி செண்பகவல்லி நகரில் வசிப்பவர் முருகேசன் (வயது 48). இவர் கோவில்பட்டி மேற்கு போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி துர்கா (45). இவர் கோவில்பட்டியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.
நேற்று முன்தினம் முருகேசன் போலீஸ் நிலையத்தில் இரவு பணிக்கு சென்றார். எனவே இரவில் துர்கா தன்னுடைய குழந்தைகளுடன் வீட்டில் தூங்கினார்.
10 பவுன் நகை பறிப்புஇதனை நோட்டமிட்ட மர்மநபர்கள் நள்ளிரவில் அவருடைய வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே நுழைந்தனர். அங்கு வீட்டில் தூங்கி கொண்டிருந்த துர்காவின் கழுத்தில் கிடந்த 10 பவுன் நகையை மர்மநபர்கள் பறித்தனர்.
உடனே கண் விழித்த துர்கா ‘திருடன்... திருடன்...‘ என்று கூச்சலிட்டார். ஆனால் அக்கம் பக்கத்தினர் வருவதற்குள், மர்மநபர்கள் மின்னல் வேகத்தில் இருளில் வெளியே தப்பி ஓடி விட்டனர்.
மர்மநபர்களுக்கு வலைவீச்சுஇதுகுறித்து தகவல் அறிந்ததும், கோவில்பட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெபராஜ், மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயகம், சப்–இன்ஸ்பெக்டர் முத்து விஜயன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த துணிகர நகை பறிப்பு சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.