காஞ்சீபுரம் மாவட்டத்தில் காந்தி ஜெயந்தியன்று விடுமுறை அளிக்காத 118 நிறுவனங்கள் மீது நடவடிக்கை


காஞ்சீபுரம் மாவட்டத்தில் காந்தி ஜெயந்தியன்று விடுமுறை அளிக்காத 118 நிறுவனங்கள் மீது நடவடிக்கை
x
தினத்தந்தி 6 Oct 2018 3:45 AM IST (Updated: 5 Oct 2018 11:36 PM IST)
t-max-icont-min-icon

காஞ்சீபுரம் மாவட்டத்தில் காந்தி ஜெயந்தியன்று விடுமுறை அளிக்காத 118 நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காஞ்சீபுரம் தொழிலாளர் உதவி ஆணையர் ரவிஜெயராம் தெரிவித்துள்ளார்.

காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் தொழிலாளர் உதவி ஆணையர் ரவிஜெயராம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

காந்திஜெயந்தியன்று காஞ்சீபுரம் மாவட்டம் முழுவதும் உள்ள கடைகள், தொழில் நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள் உள்ள 141 நிறுவனங்களில் என்னுடைய தலைமையில் அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது தமிழ்நாடு தொழில் நிறுவனங்கள் (தேசிய மற்றும் பண்டிகை விடுமுறை நாட்கள்) சட்டத்தின் கீழ் காந்திஜெயந்தியன்று தொழிலாளர்களுக்கு விடுமுறை அளிக்காத, மேலும் தொழிலாளர்கள் அன்றைய தினம் பணிபுரிய சம்பந்தப்பட்ட ஆய்வாளருக்கு முன்னறிவிப்பு அளிக் காத 50 கடைகள் மற்றும் நிறுவனங்கள், 56 உணவு நிறுவனங்கள், 12 மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள் என 118 நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story