ஆண்டிமடம் அருகே மணல் கடத்திய 4 டிராக்டர்கள் பறிமுதல் டிரைவர்கள் கைது


ஆண்டிமடம் அருகே மணல் கடத்திய 4 டிராக்டர்கள் பறிமுதல் டிரைவர்கள் கைது
x
தினத்தந்தி 6 Oct 2018 3:45 AM IST (Updated: 6 Oct 2018 12:18 AM IST)
t-max-icont-min-icon

ஆண்டிமடம் அருகே மணல் கடத்திய 4 டிராக்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் அதன் டிரைவர்களை போலீசார் கைது செய்தனர்.

வரதராஜன்பேட்டை,

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திக் தலைமையிலான போலீசார் நேற்று அய்யூரில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த 4 டிராக்டர்களை போலீசார் நிறுத்தி சோதனையிட்டனர். சோதனையில் அந்த டிராக்டர்களில் அய்யூர் கிராம வெள்ளாற்றில் இருந்து மணல் கடத்தி வந்தது தெரியவந்தது.

இதையடுத்து அந்த டிராக்டர்களை ஓட்டி வந்த டிரைவர்கள் காட்டாத்தூர் கிராமம் கிழக்குத்தெருவை சேர்ந்த கணேசன் (வயது 22), வெங்கடேசன் (41,) கூவத்தூர் மேலத்தெருவை சேர்ந்த கலியபெருமாள் (30), ஜெயமூர்த்தி (26) ஆகியோரை கைது செய்தனர். மேலும் மணல் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட டிராக்டர்களையும் பறிமுதல் செய்தனர்.

இதனையடுத்து பறிமுதல் செய்யப்பட்ட டிராக்டர்களை போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அப்போது, எதிர்பாராதவிதமாக டிராக்டர் ஒன்று, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து போலீஸ் நிலையம் அருகில் உள்ள குளத்தில் இறங்கி விபத்துக்குள்ளானது. ஆனால் டிரைவர் காயம் இன்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

Next Story