அனுமதியின்றி வேனில் பட்டாசுகளை கொண்டு சென்ற 4 பேர் கைது
சிவகாசியில் அனுமதியின்றி வேனில் பட்டாசுகளை கொண்டு சென்ற 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
தாயில்பட்டி,
திருத்தங்கல்லைச் சேர்ந்த செல்வம் (32), சதீஷ்குமார் (28) ஆகிய இருவரும் ஒரு மினி வேனில் சிவகாசியில் இருந்து வெம்பக்கோட்டைக்கு அனுமதியின்றி பட்டாசு பண்டல்களை கொண்டு சென்றனர். அப்போது போலீசார் அவர்களை பிடித்து கைது செய்து வேனுடன் 12 பண்டல் பட்டாசுகளை பறிமுதல் செய்தனர்.
இதே போல் ஒரு மினி வேனில் 120 கிலோ பட்டாசுகளை அனுமதியின்றி கொண்டு சென்ற சிவகாசியைச் சேர்ந்த செல்வம் (37), முருகன் (35) ஆகியோரையும் வெம்பக்கோட்டை பஸ் நிலையத்தில் வைத்து போலீசார் கைது செய்து வேனுடன் பட்டாசுகளை பறிமுதல் செய்தனர்.
இந்த நிலையில் வீட்டில் அனுமதியின்றி பட்டாசுகளை தயாரித்த சிவகாமிபுரம் மாயக்கண்ணன் (36), விளாமரத்துப்பட்டி முத்துராஜ் (51), விஜயகரிசல்குளம் காளிராஜ் (30), செந்தில்குமார் (34), துரைசாமிபுரம் நாராயணசாமி (52), பாண்டியன் (39) ஆகியோரையும் போலீசார் கைது செய்து பட்டாசுகளை பறிமுதல் செய்தனர்.