தஞ்சை மாவட்டத்தில் 5-வது நாளாக மழை நீடிப்பு குறுவை அறுவடை பணிகள் பாதிப்பு
தஞ்சை மாவட்டத்தில் 5-வது நாளாக மழை நீடித்து வருகிறது. இந்த நிலையில் குறுவை அறுவடை பணிகளும் பாதிக்கப்பட்டுள்ளன.
தஞ்சாவூர்,
தஞ்சை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நேற்று 5-வது நாளாகவும் மழை நீடித்தது. நேற்று காலை முதல் லேசான தூறலுடன் மழை காணப்பட்டது. பின்னர் மழை இன்றி வெறிச்சோடியது. இந்த நிலையில் மதியம் 1.30 மணி அளவில் பலத்த மழை பெய்தது.
இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. தஞ்சை அண்ணாசிலை, மேரீஸ்கார்னர் ரெயில்வே கீழ்பாலம் உள்ளிட்ட இடங்களில் மழைநீர் தேங்கி கிடந்தது. பின்னர் சிறிது நேரத்தில் மழை நின்றது. இந்த நிலையில் மாலை 5 மணிக்கு மீண்டும் மழை பெய்யத்தொடங்கியது.
இதே போல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது. அதிராம்பட்டினம், கும்பகோணம், பாபநாசம், அய்யம்பேட்டை, திருவிடைமருதூர், மஞ்சளாறு, பட்டுக்கோட்டை, பேராவூரணி, அணைக்கரை உள்ளிட்ட இடங்களிலும் பரவலாக மழை பெய்தது.
தஞ்சை மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் கள்ளப்பெரம்பூர், களிமேடு, சூரக்கோட்டை, மடிகை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சம்பா நெற்பயிர்கள் நீரில் மூழ்கி காணப்பட்டன. பல இடங்களில் வயலே தெரியாத அளவிற்கு தண்ணீரில் பயிர்கள் மூழ்கி உள்ளன. தண்ணீர் வடிவதற்கு வாய்க்கால்கள் சரியாக தூர்வாரப்படாததால் வடிவதிலும் தாமதம் ஏற்பட்டுள்ளது. தஞ்சை, ஒரத்தநாடு, திருவையாறு உள்ளிட்ட இடங்களிலும் குறுவை அறுவடை பணிகளும் பாதிக்கப்பட்டன.
நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-
மஞ்சளாறு 33, திருவிடை மருதூர் 32, பட்டுக்கோட்டை 29, அய்யம்பேட்டை 27, அணைக்கரை 25, பேரா வூரணி 25, கும்பகோணம் 25, பாபநாசம் 25, நெய்வாசல் தென்பாதி 24, அதிராம்பட்டினம் 22, திருவையாறு 15, தஞ்சாவூர் 14, வல்லம் 13, வெட்டிக்காடு 9, ஒரத்தநாடு 6, மதுக்கூர் 6, ஈச்சன்விடுதி 5, குருங்குளம் 4, பூதலூர் 2, கல்லணை 1, திருக்காட்டுப்பள்ளி 1.

Related Tags :
Next Story