18 வயது நிரம்பியவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்த்து கொள்ள வேண்டும் - கலெக்டர் பேச்சு
18 வயது நிரம்பியவர்கள் வாக்காளர் பட்டியலில் தங்களின் பெயரை சேர்த்து கொள்ள வேண்டும் என்று சிறப்பு கிராம சபை கூட்டத்தில் கலெக்டர் ராமன் பேசினார்.
காட்பாடி,
காட்பாடி தாலுகா கே.வி.குப்பம் ஊராட்சி ஒன்றியம் கவசம்பட்டு ஊராட்சியில் வாக்காளர் சிறப்பு சுருக்கம் குறித்த சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது. கலெக்டர் ராமன் தலைமை தாங்கினார். உதவி கலெக்டர் கா.மேகராஜ், தனித்துணை கலெக்டர் (முத்திரைத்தாள்) தினகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். காட்பாடி தாசில்தார் ஜெயந்தி வரவேற்றார்.
கூட்டத்தில் கலெக்டர் ராமன் பேசியதாவது:-
‘இந்திய தேர்தல் ஆணையம் மூலம் ஆண்டுதோறும் 18 வயது நிரம்பிய ஒவ்வொருவரையும் வாக்காளர் பட்டியலில் புதிய வாக்காளர்களாக சேர்க்கப்படுகின்றனர். பொதுமக்கள் தங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் உள்ளதா? என்று தெரிந்து கொள்ள ஆண்டுதோறும் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் சிறப்பு சுருக்க திருத்த முகாம் அனைத்து வாக்குச்சாவடி மையங்களில் நடத்தப்பட்டு பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி திருத்தம் போன்ற பணிகள் நடைப்பெறுகிறது.
பொதுமக்கள் வேலூர் மாவட்டத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் மூன்றாம் கட்ட சிறப்பு சுருக்க திருத்த முகாமில் வைக்கப்படும் வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர், முகவரி மற்றும் வாக்குச்சாவடி மையம் ஆகியவற்றை பார்த்து உறுதி செய்து கொள்ள வேண்டும்.
குறிப்பாக உங்கள் வீட்டில் உள்ளவர்கள் 18 வயது நிரம்பியவராக இருந்தால் அவர்களை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பங்களை பூர்த்தி செய்து கொடுத்து புதிய வாக்காளராக இணைத்துக்கொள்ள வேண்டும்.
ஊரை விட்டு வெளியூர் சென்று மீண்டும் சொந்த ஊருக்கு வந்து குடியேறியுள்ளவர்களும், கல்லூரிகளில் படித்து கொண்டு உள்ளவர்களும் தங்களை வாக்காளர்களாக இணைத்துக்கொள்ள இந்த முகாமினை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். வேலூர் மாவட்டத்தில் உள்ள 18 வயது நிரம்பிய அனைவரும் வாக்காளர் பட்டியலில் தங்களை இணைத்து கொண்டு இந்திய குடிமகனின் ஐனநாயக கடமையை ஆற்றவேண்டும்’ என்று அவர் பேசினார்.
முகாமில் வருவாய்த்துறை அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
இதையடுத்து கலெக்டர் ராமன் காட்பாடி மேலூர் பகுதியில் உள்ள பாலாற்றில் புதியதாக கட்டப்பட உள்ள கீழ்மட்ட தடுப்பணை கட்டும் இடத்தையும், அங்கிருந்து ஏரிகளுக்கு நீர் செல்லும் வழித்தடத்தையும் பார்வையிட்டார்.
அப்போது நிர்வாக பொறியாளர் (நீர்வளஆதாரம்) அன்பரசன், உதவி செயற்பொறியாளர் விஸ்வநாதன் உள்பட பலர் உடன் இருந்தனர்.

Related Tags :
Next Story