10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு கால அட்டவணை வெளியீடு


10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு கால அட்டவணை வெளியீடு
x
தினத்தந்தி 7 Oct 2018 4:44 AM IST (Updated: 7 Oct 2018 4:44 AM IST)
t-max-icont-min-icon

10, 12-ம் ஆண்டு வகுப்பு பொதுத்தேர்வு கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

மும்பை,

மராட்டியத்தில் மாநில கல்வி வாரியம் சார்பில் 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை 14 லட்சம் பேரும், 10-ம் வகுப்பு தேர்வை 16 லட்சம் பேரும் எழுதினர். இந்தநிலையில் இந்த கல்வி ஆண்டு பொதுத்தேர்விற்கான உத்தேச கால அட்டவணையை மாநில கல்வி வாரியம் வெளியிட்டுள்ளது.

இதன்படி 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு 2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 21-ந் தேதி தொடங்கி மார்ச் மாதம் 20-ந் தேதி வரை நடக்கிறது. 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 1-ந் தேதி தொடங்கி மார்ச் 22-ந் தேதி வரை நடக்கிறது.

மாணவர்கள் முழு கால அட்டவணையை www.mahahsscboard.maharastra.gov.in என்ற இணையதள பக்கத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம். கால அட்டவணை குறித்த ஆட்சேபனைகள், கருத்துகளை 15 நாட்களுக்கு மாநில கல்வி வாரியத்திற்கு அனுப்பி வைக்கலாம்.

விரைவில் இறுதி கால அட்டவணை வெளியிடப்படும் என கல்வி வாரியம் தெரிவித்து உள்ளது.

Next Story