சேலம் ஆவின் கூட்டுறவு சங்க தேர்தல்: பா.ம.க.வினருக்கு அனுமதி மறுப்பு - போலீசாருடன் வாக்குவாதம்
சேலம் ஆவின் பால்பண்ணையில் கூட்டுறவு சங்க தேர்தலின்போது வேட்புமனு தாக்கல் செய்ய வந்த பா.ம.க.வினருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் அவர்கள் போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
சேலம்,
தமிழகத்தில் கூட்டுறவு சங்க தேர்தல் ஏற்கனவே 2 கட்டங்கள் முடிவடைந்த நிலையில் தற்போது 3-வது கட்டமாக விடுபட்ட கூட்டுறவு சங்கங்களுக்கு தேர்தல் நடைபெற்று வருகிறது. அதன்படி, சேலம் இரும்பாலை ரோட்டில் சித்தனூரில் உள்ள ஆவின் பால் பண்ணையில் சேலம் மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று நடந்தது.
முதலில் அ.தி.மு.க.வை சேர்ந்தவர்கள் அலுவலகத்திற்கு வந்து தேர்தல் நடத்தும் அதிகாரிகளிடம் வேட்பு மனுதாக்கல் செய்தனர். இதைத்தொடர்ந்து பா.ம.க. சார்பில் மாநில துணை பொதுச்செயலாளர் அருள் தலைமையில் கட்சி நிர்வாகிகள் சிலர் வேட்பு மனுதாக்கல் செய்ய ஆவின் பால் பண்ணைக்கு வந்தனர். ஆனால் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை.
அப்போது, வேட்புமனு தாக்கல் செய்ய பா.ம.க.வினருக்கு மட்டும் அனுமதி மறுப்பது ஏன்? என்று அங்கிருந்த போலீசாரிடம் அருள் மற்றும் சிலர் கேள்விகளை கேட்டனர். இதனால் பா.ம.க.வினருக்கும், போலீசாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. மேலும், தங்களை உள்ளே அனுமதிக்குமாறு பா.ம.க.வினர் கோஷங்களை எழுப்பினர். இதனால் அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை உருவானது.
இந்த சம்பவம் பற்றி அறிந்த சூரமங்கலம் போலீஸ் உதவி கமிஷனர் மோகன் மற்றும் அதிகாரிகள் அங்கு வந்து பா.ம.க. நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் கடைசி வரையிலும் வேட்பு மனுதாக்கல் செய்ய பா.ம.க.வினருக்கு அனுமதி வழங்கப்படவில்லை. இதனால் அவர்கள் ஏமாற்றத்துடன் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இதுகுறித்து பா.ம.க. மாநில துணை பொதுச்செயலாளர் அருள் கூறுகையில், சேலம் ஆவின் பால் பண்ணை கூட்டுறவு சங்க தேர்தலில் வேட்பு மனுதாக்கல் செய்ய எங்களை அனுமதிக்கவில்லை. போலீசார் ஆளுங்கட்சிக்கு சாதமாக செயல்படுகிறார்கள். அதிகாரிகளும் ஒருதலை பட்சமாக இருக்கின்றனர்.
நியாயமான முறையில் கூட்டுறவு சங்க தேர்தலை நடத்தினால் பா.ம.க. வெற்றி பெறும். ஆனால் அது நடைபெறக்கூடாது என்பதற்காக அ.தி.மு.க.வினர் திட்டமிட்டு எங்களை வேட்பு மனுதாக்கல் செய்யவிடாமல் தடுக்கின்றனர். இது தொடர்பாக கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து அனுமதி பெற்று கூட்டுறவு தேர்தலில் போட்டியிடுவோம், என்றார்.

Related Tags :
Next Story