புதுவையில் 3 நாட்களாக பலத்த மழை: வீடுகள், வயல்களில் தண்ணீர் புகுந்தது
புதுவையில் கடந்த 3 நாட்களாக பலத்த மழை பெய்ததை யொட்டி வீடுகள், வயல்களில் தண்ணீர் புகுந்தது. மரம் சாய்ந்ததால் மின்சார வினியோகம் பாதிக்கப்பட்டது. குடிசை வீடும் இடிந்து விழுந்தது.
அரியாங்குப்பம்,
புதுவை மாநிலத்தில் கடந்த 3 நாட்களாக பரவலாக மழை பெய்தது. இதனால் நகரின் முக்கிய சாலைகள், உள்புற குடியிருப்பு பகுதிகளில் உள்ள தெருக்களில் மழை தண்ணீர் தேங்கியது. பல்வேறு இடங்களில் தாழ்வான இடங்களில் தண்ணீர் புகுந்தது. 3 நாட்களிலும் நள்ளிரவு தொடங்கி பகல் முழுவதும் விட்டு விட்டு மழை பெய்ததால் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், வேலைக்கு செல்வோர் என அனைத்து தரப்பினரும் கடும் அவதிக்குள்ளானார்கள். தூறல் பெய்தபடி இருந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
இதேபோல் பாகூர், வில்லியனூர், திருக்கனூர், திருபுவனை உள்ளிட்ட புறநகர் பகுதியிலும் மழை பெய்து பாதிப்பு ஏற்பட்டது. பாகூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் காலை முதல் நேற்று காலை வரை கணக்கிட்டதில் 84 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருந்தது. பாகூர் பகுதியில் 500-க்கும் மேற்பட்ட வீடுகளை மழை நீர் சூழ்ந்தது. மழைக்காலம் தொடங்கும் முன்பே வாய்க்கால்கள் தூர்வாரப்படாததால், மழையால் அவை நிரம்பி கழிவுநீர் வெளியேறி சாலைகளில் தேங்கியது. தாழ்வான பகுதியில் வீடுகளிலும் தண்ணீர் புகுந்தது.
பாகூர், குருவிநத்தம், சோரியாங்குப்பம், பரிக்கல்பட்டு ஆகிய பகுதிகளில் வயல்களில் மழை நீர் தேங்கியதால் நெற் பயிர்கள் தண்ணீரில் மூழ்கி உள்ளன. இதுபற்றி தகவல் அறிந்ததும் வேளாண்மை துறை கூடுதல் கண்காணிப்பு இயக்குனர் பார்த்திபன் மற்றும் வேளாண்துறை அதிகாரிகள் வயல்களுக்கு சென்று பார்வையிட்டனர்.
பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஆறுதல் கூறினர். ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் அவசர உதவி டெலிபோன் நம்பரை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தால் பொதுப்பணித்துறையினர் உரிய நடவடிக்கை எடுப்பார்கள் என்று தெரிவித்தனர்.
பாகூர் அருகே முள்ளோடையை அடுத்த உச்சிமேடு கிராமத்தில் நாகம்மாள் என்பவரின் குடிசை வீடு மழையால் இடிந்து விழுந்தது. அப்போது வீட்டில் யாரும் இல்லாததால் உயிர்சேதம் ஏதும் ஏற்படவில்லை. இதுபற்றி தகவல் அறிந்து பாகூர் தாசில்தார் கார்த்திகேயன் அங்கு சென்று பார்வையிட்டு அரசு சார்பில் நிவாரண உதவிகளை வழங்கினார்.
காட்டேரிக்குப்பத்தில் ஒரு மரம் வேரோடு சாய்ந்து விழுந்தது. மங்கலம் கிராமத்தில் மின்சார வயர் அறுந்து விழுந்ததால் மின்வினியோகம் தடைபட்டு கிராம மக்கள் அவதியடைந்தனர். அதேபோல் திருக்கனூரை அடுத்த சுத்துக்கேணி பகுதியில் ஒரு மரம் வேரோடு சாய்ந்து மின்சார வயரில் விழுந்தது. இதுபற்றி தெரியவந்ததும் மின்துறை ஊழியர்கள் அந்த மரத்தை வெட்டி அப்புறப்படுத்தி சீரான மின் வினியோகம் செய்தனர்.
திருபுவனை சுற்றுவட்டார பகுதியில் பெய்த மழையால் புதுவை-விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் திருவண்டார்கோவில் வட்டார போக்குவரத்து அலுவலகம் எதிரே இருந்த பழமையான மரத்தின் பெரிய கிளைகள் திடீரென்று முறிந்து விழுந்தன. அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவர் மீது கிளைகள் விழுந்தன. இதில் அவர் லேசான காயத்துடன் தப்பினார்.
மோட்டார் சைக்கிளை தொடர்ந்து வந்த தனியார் மற்றும் அரசு பஸ்களின் டிரைவர்கள் மரக்கிளை முறிந்து விழுவதை பார்த்ததும் திடீர் பிரேக் பிடித்து பஸ்களை நிறுத்தினார்கள். இதனால் அந்த பஸ்களில் வந்த பயணிகள் தப்பினர். இதையொட்டி அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
அப்போது அந்த வழியாக வந்த கோபிகா எம்.எல்.ஏ. இதுபற்றி திருபுவனை போலீஸ் நிலையத்துக்கும், தேசிய நெடுஞ்சாலை ஊழியர்களுக்கும் தகவல் தெரிவித்தார். உடனே அவர்கள் விரைந்து வந்து மரத்தின் கிளைகளை வெட்டி அகற்றினர். அதன் பிறகு அங்கு போக்குவரத்து சீரானது.
அரியாங்குப்பத்தில் தாழ்வான பல இடங்களில் மழைநீர் புகுந்தது. அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் கலியமூர்த்தி மற்றும் ஊழியர்கள் அந்த பகுதிகளை பார்வையிட்டு, பொக்லைன் எந்திரத்தின் உதவியுடன் மழை நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுத்தனர்.
அரியாங்குப்பம், நோணாங்குப்பம், மணவெளி, ஓடைவெளி உள்ளிட்ட பகுதிகளில் தேங்கிய மழை தண்ணீர், குப்பைகள் அப்புறப்படுத்தப்பட்டன. அரியாங்குப்பம் பாரதி நகரில் வாய்க்காலில் ஏற்பட்டு இருந்த அடைப்பை கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்கள் அகற்றி கழிவுநீர் தடையின்றி செல்ல நடவடிக்கை எடுத்தனர்.
மழையால் நோணாங்குப்பம் சுண்ணாம்பாற்றில் தண்ணீர்வரத்து அதிகரித்தது. இதனால் ஆற்றின் குறுக்கே உள்ள படுகை அணை நிரம்பியது. சுண்ணாம்பாறு படகு குழாமில் படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டு இருந்தது. இது தெரியாமல் பாரடைஸ் பீச்சுக்கு வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

Related Tags :
Next Story