வங்கியில் போலி நகைகளை அடகு வைத்து ரூ.11¾ லட்சம் மோசடி நகை மதிப்பீட்டாளருக்கு வலைவீச்சு


வங்கியில் போலி நகைகளை அடகு வைத்து ரூ.11¾ லட்சம் மோசடி நகை மதிப்பீட்டாளருக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 8 Oct 2018 3:45 AM IST (Updated: 8 Oct 2018 12:08 AM IST)
t-max-icont-min-icon

நாகையில் வங்கியில் போலி நகைகளை அடகு வைத்து ரூ.11¾ லட்சம் மோசடி செய்த நகை மதிப்பீட்டாளரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

நாகப்பட்டினம்,

நாகை வெளிப்பாளையம் சிவன் தெற்கு வீதியை சேர்ந்தவர் சாமிநாதன். இவர் நாகையில் உள்ள ஒரு தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் நகை மதிப்பீட்டாளராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் சாமிநாதன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மோசடியில் ஈடுபடுவதாக வங்கி துணை பொதுமேலாளருக்கு புகார் வந்தது.

இதை தொடர்ந்து அதிகாரிகள் வங்கி கணக்கை ஆய்வு செய்தனர். அப்போது வாடிக்கையாளர்களின் வெவ்வேறு பெயர்களில் 584 கிராம் போலி நகைகளை ரூ.11 லட்சத்து 91 ஆயிரத்துக்கு அடகு வைத்து மோசடி செய்ததும், வெளிப்பாளையம் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த சிவசண்முகம் என்ற வாடிக்கையாளருக்கு ரூ.2½ லட்சத்திற்கான போலி ரசீது கொடுத்ததும் தெரிய வந்தது.

இதுகுறித்து வங்கி துணை பொது மேலாளர் மற்றும் சிவசண்முகம் ஆகியோர் நாகை டவுன் போலீசில் புகார் கொடுத்தனர். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள நகை மதிப்பீட்டாளர் சாமிநாதனை வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story