சபரிமலைக்கு பெண்களை அனுமதித்தை மறுபரிசீலனை செய்யக்கோரி இந்து அமைப்பினர் ஆர்ப்பாட்டம்


சபரிமலைக்கு பெண்களை அனுமதித்தை மறுபரிசீலனை செய்யக்கோரி இந்து அமைப்பினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 8 Oct 2018 4:15 AM IST (Updated: 8 Oct 2018 12:13 AM IST)
t-max-icont-min-icon

கோவை துடியலூர் அருகே இந்து அமைப்பினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

துடியலூர்,

சபரிமலைக்கு செல்ல பெண்களுக்கு அனுமதி வழங்கிய உச்சநீதிமன்றம் தீர்ப்பை மறுபரிசீலனை செய்யக்கோரி கோவை துடியலூர் பஸ் நிறுத்தம் அருகே இந்து அமைப்பினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு இந்து முன்னணி மாவட்ட பொருளாளர் தியாகராஜன் வரவேற்று பேசினார். கோட்ட பொறுப்பாளர் பாலன் முன்னிலை வகித்தார். இந்து மத பக்தர்கள் பேரவை அமைப்பாளர் முருகானந்தம் தலைமை தாங்கினார். மகளிரணி சாருலதா கலந்து கொண்டு பேசினார்.

முன்னதாக என்.ஜி.ஜி.ஓ காலனியில் இருந்து பொதுமக்கள் உள்ளிட்ட பக்தர்கள் அய்யப்பன் படம் ஏந்தி ஊர்வலமாக சென்றனர். இதில் இந்து மத பக்தர்கள் பேரவை, அய்யப்பா சேவா சங்கம், இந்து முன்னணி உள்ளிட்ட அமைப்பினர் கலந்து கொண்டனர். இதில் அசோக், ஜெய்கார்த்திக், சுதாகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story