கல்லணைக்கால்வாயின் பலவீனமான கரையில் அதிகாரி ஆய்வு
கல்லணைக்கால்வாயின் பலவீனமான கரை பகுதியில் பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் செந்தில்குமார் ஆய்வு செய்தார்.
திருக்காட்டுப்பள்ளி,
மேட்டூர் அணை திறக்கப்பட்டு 2 மாதங்களுக்கு மேலாகியும் தஞ்சை மாவட்டத்தில் உள்ள கல்லணைக்கால்வாயின் கடைமடை பகுதிக்கு தண்ணீர் சென்றடையவில்லை. இதன் காரணமாக சம்பா சாகுபடி பணிகளை மேற்கொள்ள வழியின்றி விவசாயிகள் சிரமப்பட்டு வருகிறார்கள்.
இதுகுறித்து பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் செந்தில்குமார் ஆய்வு மேற்கொண்டார். அப்போது கல்லணையில் உள்ள கல்லணைக்கால்வாயின் தலைப்பில் இருந்து கடைமடை பகுதி வரை சென்றார். இதில் கல்லணைக்கால்வாயின் பலவீனமான கரை பகுதிகளை பார்வையிட்ட அவர், அங்கு மணல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டு முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதை ஆய்வு செய்தார்.
மேலும் ராஜாமடம் வாய்க்காலில் இருந்து செம்பலி குறிச்சி ஏரி, அக்னி ஆறு ஆகியவற்றில் தண்ணீர் நிரப்பப்படுவதை பார்வையிட்டார். ஆய்வின்போது செயற்பொறியாளர்கள் முருகேசன், செல்லமுத்து, உதவி செயற்பொறியாளர் சண்முகவேல், உதவி பொறியாளர்கள் அன்பரசன், திலீபன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Related Tags :
Next Story