வெம்பக்கோட்டை பகுதியில் அனுமதியின்றி வெடி தயாரித்த 2 பேர் கைது
வெம்பக்கோட்டை பகுதியில் அனுமதியின்றி வெடி தயாரித்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
தாயில்பட்டி,
வெம்பக்கோட்டை பகுதியில் அனுமதியின்றி வீடுகளில் பட்டாசு தயாரிப்பதாக கிடைத்த தகவலை தொடர்ந்து சப்–இன்ஸ்பெக்டர் ஞானசேகரன் தலைமையில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. அப்போது கணியாம்பட்டி கிராமத்தில் இருளப்பன் (வயது50) என்பவரது வீட்டில் இருந்து 100 கிலோ லட்சுமி வெடி, 100 குரோஸ் வெள்ளைத்திரி, 6 பெட்டிகளில் இருந்த சரவெடி ஆகியவை கைப்பற்றப்பட்டன. அவர் கைது செய்யப்பட்டார்.
இதேபோல குமார் (26) என்பவரது வீட்டில் இருந்து 75 கிலோவெடிகள், 46 பாக்கெட் பட்டாசுகள் பறிமுதல் செய்யப்பட்டன. குமாரை போலீசார் கைது செய்தனர். இவருக்கு மூலப்பொருட்களை சப்ளை செய்ததாக ராமலிங்காபுரத்தை சேர்ந்த பாஸ்கரன் (58) என்பவரும் கைது செய்யப்பட்டார். மேலும் பட்டாசு திரி சப்ளை செய்ததாக தாயில்பட்டியை சேர்ந்த ராமச்சந்திரன்(60), ராமலிங்காபுரத்தை சேர்ந்த பாண்டியராஜன்(45) ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.
மேலும் திருட்டுத்தனமாக பட்டாசு தயாரிப்போருக்கு திரி சப்ளை செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் சூப்பிரண்டு ராஜராஜன் எச்சரித்துள்ளார்.