மராட்டியத்தில் நிலவும் வறட்சி குறித்து மத்திய அரசிடம் அறிக்கை தாக்கல்


மராட்டியத்தில் நிலவும் வறட்சி குறித்து மத்திய அரசிடம் அறிக்கை தாக்கல்
x
தினத்தந்தி 8 Oct 2018 4:57 AM IST (Updated: 8 Oct 2018 4:57 AM IST)
t-max-icont-min-icon

மராட்டியத்தில் நிலவும் வறட்சி குறித்து மத்திய அரசிடம் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்று விவசாயத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்

மும்பை,

வடக்கு மராட்டியம் மற்றும் மரத்வாடா பகுதிகளில் இந்த ஆண்டு வழக்கத்தை விட மிக குறைந்த அளவே மழை பொழிவு இருந்தது.

இதனால் அந்த பகுதிகளில் வறட்சி நிலவி வருகிறது. சுமார் 5 கிலோமீட்டர் வரை தண்ணீருக்காக கிராம மக்கள் நடந்து செல்வதாக தகவல்கள் வெளியாகின. இந்தநிலையில் மத்திய அரசிடம் மராட்டியத்தில் நிலவும் நீர் பற்றாக்குறை மற்றும் வறட்சி குறித்த அறிக்கையை மாநில அரசு தாக்கல் செய்துள்ளது . இதுகுறித்து விவசாயத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

நீர் பற்றாக்குறை குறித்த அறிக்கை மூலம் மராட்டியத்தில் வறட்சி நிலவுகிறதா? என்பதை அறிந்துகொள்ள முடியும்.

இந்த அறிக்கையில் மண்ணின் ஈரப்பதம், மழை பொழிவு மற்றும் தற்போதைய பயிர்களின் நிலைமை ஆகியவை தொகுக்கப்பட்டது.

மாநிலத்தில் உள்ள 170 தாலுகாக்களில் சராசரி மழை அளவில் 75 சதவீதத்திற்கும் குறைவான மழை பொழிந்துள்ளது. இதில் பெரும்பான்மையான தாலுகாக்கள் மரத்வாடா மற்றும் வடக்கு மராட்டிய பகுதிகளில் அமைந்துள்ளன.

குறிப்பாக மரத்வாடா மண்டலத்தில் உள்ள அணைகளில் வெறும் 27 சதவீதம் நீர் இருப்பே உள்ளது.

இதுகுறித்த இறுதி முடிவை மத்திய அரசு வரும் 13-ந் தேதி அறிவிக்கும் என்று எதிர்பார்க்கிறோம் அறிக்கையின்படி மராட்டியத்தில் அதிகவறட்சிநிலவுவதாக மத்திய அரசு ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில் வறட்சி நிவாரண நிதி ஒதுக்கும்படி கோரிக்கை வைக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story