ஒரே கருத்துடைய கட்சிகள் ஓரணியில் திரள வேண்டும் மல்லிகார்ஜுன கார்கே அழைப்பு


ஒரே கருத்துடைய கட்சிகள் ஓரணியில் திரள வேண்டும் மல்லிகார்ஜுன கார்கே அழைப்பு
x
தினத்தந்தி 7 Oct 2018 11:46 PM GMT (Updated: 7 Oct 2018 11:46 PM GMT)

மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் பகுஜன் சமாஜ் மற்றும் சமாஜ்வாடி ஆகிய கட்சிகள் தனித்து போட்டியிடுவதாக அறிவித்துள்ளன.

பெங்களூரு,

நாடாளுமன்ற காங்கிரஸ் குழு தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பெங்களூருவில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

ஒவ்ெவாரு மாநிலத்திற்கும் அதற்கே உரிய அரசியல் வியூகங்கள் உள்ளன. ஆனால் ஒரே கருத்துடைய கட்சிகள் ஓரணியில் திரள வேண்டும். இந்த கொள்கையில் காங்கிரஸ் நம்பிக்கை வைத்துள்ளது.

மத்தியில் ஆளும் பா.ஜனதாவை வீழ்த்துவது எதிர்க்கட்சிகளின் குறிக்கோளாக உள்ளது. இந்த நிலையில் கட்சி தலைவர்கள் சிந்தித்து செயல்பட வேண்டும்.

இவ்வாறு மல்லிகார்ஜுன கார்கே கூறினார்.

Next Story