சித்தராமையா மீண்டும் முதல்-மந்திரி ஆவார் மந்திரி ஜமீர்அகமதுகான் பேட்டி


சித்தராமையா மீண்டும் முதல்-மந்திரி ஆவார் மந்திரி ஜமீர்அகமதுகான் பேட்டி
x
தினத்தந்தி 8 Oct 2018 5:29 AM IST (Updated: 8 Oct 2018 5:29 AM IST)
t-max-icont-min-icon

சித்தராமையா மீண்டும் முதல்-மந்திரி ஆவார் என்று மந்திரி ஜமீர்அகமதுகான் கூறினார். உணவு மற்றும் பொது விநியோகத்துறை மந்திரி ஜமீர் அகமதுகான் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

பெங்களூரு,

சித்தராமையா முதல்-மந்திரியாக இருந்தபோது, முஸ்லிம் மக்களின் மேம்பாட்டிற்காக ரூ.3,100 கோடி நிதி ஒதுக்கீடு செய்தார். ஒருவேளை அவர் முதல்-மந்திரியாக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டு இருந்தால், ரூ.10 ஆயிரம் கோடி கொடுத்திருப்பார்.

இத்தகைய மக்கள் செல்வாக்கு உள்ள தலைவரை யாரும் எப்போதும் மறக்க மாட்டார்கள். மாநிலத்தின் எந்த பகுதிக்கு சென்றாலும், முஸ்லிம் மக்கள் சித்தராமையாவை நினைக்கிறார்கள். சிறுபான்மை மக்களின் நலனில் சித்தராமையா அபாரமான அக்கறையை செலுத்தினார்.

இத்தகைய தலைவரான சித்தராமையா மீண்டும் முதல்-மந்திரியாக வேண்டும். நாங்கள் அவருடன் சாகும்வரை இருப்போம். கூட்டணி அரசு 5 ஆண்டுகளை முழுமையாக நிறைவு ெசய்யும். இந்த அரசு சிறப்பான முறையில் செயலாற்றி வருகிறது.

5 ஆண்டுகளுக்கும் குமாரசாமி முதல்-மந்திரி பதவியில் நீடிப்பார். இதற்கு காங்கிரஸ் மேலிடம் ஒப்புதல் தெரிவித்துள்ளது. மூத்த தலைவர்களின் விருப்பப்படி இந்த கூட்டணி ஆட்சி செயல்படும்.

குமாரசாமியின் ஆட்சி காலம் முடிந்த பிறகு கர்நாடக சட்டசபை தேர்தல் நடைபெறும். அந்த தேர்தலில் காங்கிரஸ் பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும். அப்போது சித்தராமையா மீண்டும் முதல்-மந்திரி ஆவார். இது எனது சொந்த கருத்து அல்ல. இது கர்நாடக மக்களின் கருத்தாகும். தலைவர் என்றால் அது சித்தராமையாவை போல் இருக்க வேண்டும்.

அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, சித்தராமையா இருக்கும்வரை, முஸ்லிம் மக்கள் பயப்பட தேவை இல்லை. எங்களை போன்றவர்களுக்கு இந்த தலைவர்களே வழிகாட்டிகள் ஆவார்கள்.

இவ்வாறு ஜமீர்அகமதுகான் கூறினார்.

Next Story