மந்திரிசபை விரிவாக்கத்தை தள்ளிவைக்குமாறு ராகுல் காந்தியிடம் நான் கூறவில்லை - தேவேகவுடா
மந்திரிசபை விரிவாக்கத்தை தள்ளிவைக்குமாறு ராகுல் காந்தியிடம் நான் கூறவில்லை என்று தேவேகவுடா கூறினார்.
பெங்களூரு,
பெங்களூருவில், எழுத்தாளர் ஹம்பனாவின் புத்தக வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் முன்னாள் பிரதமர் தேவேகவுடா கலந்து கொண்டு புத்தகத்தை வெளியிட்டு பேசியதாவது:-
எனது அரசியல் வாழ்க்கையில் இது மிக முக்கியமான விழா. ஒரு கன்னட எழுத்தாளரின் புத்தக வெளியீட்டு விழாவில், உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து வந்து கலந்து கொண்டிருப்பதை பார்க்கிறேன். இது சாதாரண விஷயம் அல்ல.
ராமாயணம், மகாபாரதத்தை ஆராய்ச்சி செய்யும்போது, நமக்கு சில சந்தேகங்கள் எழுகின்றன. நான் எனது வாழ்க்கையின் இறுதி கட்டத்தில் இருக்கிறேன்.
இவ்வாறு தேவேகவுடா பேசினார்.
அதன் பிறகு அவர் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
சட்டமன்றம், நாடாளுமன்ற இடைத்தேர்தலில் எங்களின் நிலைப்பாடு குறித்து தெளிவுபடுத்தி உள்ளேன். மண்டியா தொகுதியில் எங்கள் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் யார் என்று இன்னும் முடிவு எடுக்கவில்லை. நேற்று(அதாவது, நேற்று முன்தினம்) தான் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
சில நாட்களில் வேட்பாளர்களை அறிவிப்போம். கர்நாடக மந்திரிசபை விரிவாக்கத்தை தள்ளிவைக்கும்படி ராகுல் காந்தியிடம் நான் கூறவில்லை. கர்நாடக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் ேவணுகோபாலை சந்தித்து பேசினேன். மந்திரிசபை விரிவாக்கம் மற்றும் வாரிய தலைவர்கள் நியமனத்தை விரைவாக மேற்கொள்ளுமாறு கூறினேன்.
இவ்வாறு தேவேகவுடா கூறினார்.

Related Tags :
Next Story