வணிக நிறுவனங்கள் பரிசு குலுக்கல் நடத்தினால் நடவடிக்கை அரியலூர் கலெக்டர் எச்சரிக்கை
வியாபாரத்தை பெருக்க வணிக நிறுவனங்கள் பரிசு குலுக்கல் நடத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரியலூர் கலெக்டர் விஜயலட்சுமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அரியலூர்,
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு சில வணிக நிறுவனங்கள் தங்களது வியாபாரத்தை பெருக்கி கொள்ளும் நோக்கத்தோடு பரிசு குலுக்கல் திட்டங்களை நடத்துகிறார்கள். பரிசு திட்டங்கள் மூலம் பொருட்களை விலை கூட்டி விற்பது, தரமற்ற பொருட்களை விற்பது, அளவை குறைப்பது, கலப்பட பொருட்கள் மற்றும் பழைய இருப்பு பொருட்களை விற்பனை செய்வது போன்ற செயல்கள் மூலம் நுகர்வோர் வணிகர்களால் ஏமாற்றப்படுகிறார்கள்.
நுகர்வோரின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு இனிவரும் நாட்களில் தனிநபர், விற்பனை கூடங்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் தங்கள் வியாபாரத்தில் சீட்டு மற்றும் கூப்பன் திட்டங்கள், குலுக்கல் திட்டங்கள், பரிசு திட்டங்கள், சலுகை திட்டங்கள் போன்ற திட்டங்களை செயல்படுத்தக் கூடாது.
மீறினால் தமிழ்நாடு பரிசு திட்டங்கள் (தடுப்பு) சட்டம் 1979-ன் படி வணிக நிறுவனங்கள் மீது குற்ற நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

Related Tags :
Next Story