500 சுயநிதி பள்ளிகளுக்கு விரைவில் அங்கீகார சான்றிதழ் வழங்கப்படும் அமைச்சர் செங்கோட்டையன் தகவல்
500 சுயநிதி பள்ளிகளுக்கு விரைவில் அங்கீகார சான்றிதழ் வழங்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.
திருச்சி,
பள்ளிக்கல்வித் துறையின் கீழ் இயங்கும் மெட்ரிக் பள்ளிகள் இயக்ககத்தின் சார்பில் திருச்சி, பெரம்பலூர், அரியலூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், சிவகங்கை ஆகிய 10 மாவட்டங்களில் உள்ள 285 மெட்ரிக் பள்ளிகளுக்கு தற்காலிக அங்கீகாரச் சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று திருச்சி கமலா நிகேதன் பள்ளியில் நடந்தது. அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தலைமை தாங்கினார். அமைச்சர் வளர்மதி, கலெக்டர் ராஜாமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த விழாவில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு 285 மெட்ரிக் பள்ளிகளுக்கு தற்காலிக அங்கீகார சான்றிதழ்களை வழங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் 82 லட்சம் குழந்தைகள் படிக்கின்றனர். அவர்களை பேணிக்காக்க பள்ளிக்கல்வித் துறை பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. இம்மாணவர்களை சிறந்த கல்வியாளர்களாக உருவாக்குவதற்கு அரசு பாடுபட்டு வருகிறது. சி.பி.எஸ்.இ. மற்றும் மெட்ரிக்குலேசன் பள்ளிகளில் சுமார் 41 லட்சம் மாணவ-மாணவிகள் படிக்கின்றனர். கிராமப்புற மாணவர்களின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. சென்ற ஆண்டு தற்காலிக அங்கீகாரச் சான்று வழங்கப்பட்டது. இரண்டாவது முறையாக இந்த ஆண்டும் வழங்கப்படுகிறது. தமிழ்நாட்டில் 500 சுயநிதி பள்ளிகள் உள்ளன. இப்பள்ளிகளுக்கு மிகவிரைவில் ஒரே இடத்தில் ஒரே நாளில் நானே அங்கீகார சான்றிதழ்களை வழங்குவேன்.
கிராமப்புற மாணவர்களின் எதிர்கால நலனை கருத்தில்கொண்டு 1, 6, 9, 11-ம் வகுப்பிற்கு புதிய பாடத்திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்தியநாடே வியக்கத்தக்க வகையில் 8 மாதத்தில் இப்பாடத்திட்டம் மாற்றி அமைக்கப்பட்டது. நமது பாடத்திட்டத்தை பார்த்து அண்டை மாநிலங்கள் வியந்துபோய் உள்ளன. நவம்பர் முதல் வாரத்தில் 6 முதல் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஸ்மார்ட் வகுப்புகள் தொடங்கப்படும். 9, 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு கணினி வழியாக இணையதள வசதி நவம்பர் மாதம் முதல் தொடங்கப்படும். டிசம்பர் முதல் வாரத்தில் 620 பள்ளிகளில் தலா ரூ. 20 லட்சம் செலவில் மத்திய அரசு நிதியுதவியுடன் அறிவியல் ஆய்வகம் அமைக்கப்படும். இந்தியாவில் தமிழக பள்ளிக்கல்வித்துறையானது ஒரு வரலாற்றுப் படைப்போடு செயல்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் பேசினார்.
இதனை தொடர்ந்து நிருபர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் செங்கோட்டையன் ‘ஆசிரியர்களின் போராட்ட அறிவிப்பு தொடர்பாக தமிழக அரசின் தலைமை செயலாளர் கொள்கை விளக்கத்தை அளித்து உள்ளார். இதற்கு பதில் அளிக்க வேண்டியது ஆசிரியர்களின் கடமை ஆகும். எனவே பேச்சுவார்த்தைக்கு அழைக்கப்படுவார்களா? என கூற முடியாது. தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கும் தகுதி தேர்வு நடத்தப்படவேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது. ஆசிரியர் பற்றாக்குறை காரணமாக அவர்கள் கால அவகாசம் கேட்டு இருக்கிறார்கள்’ என்றார்.
இதில் மெட்ரிக் பள்ளிகள் இயக்குனர் கண்ணப்பன், மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரி ராமகிருஷ்ணன் மற்றும் மாவட்ட கல்வி அதிகாரிகள், மெட்ரிக் பள்ளிகளின் தாளாளர்கள், முதல்வர்கள் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story