ரெயில் நிலையத்தில் என்ஜின் டிரைவர்- ஊழியர்கள் மோதல் போலீசார் விசாரணை


ரெயில் நிலையத்தில் என்ஜின் டிரைவர்- ஊழியர்கள் மோதல் போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 10 Oct 2018 3:45 AM IST (Updated: 10 Oct 2018 1:03 AM IST)
t-max-icont-min-icon

மயிலாடுதுறை ரெயில் நிலையத்தில் என்ஜின் டிரைவர்- ஊழியர்கள் இடையே மோதல் ஏற்பட்டு இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மயிலாடுதுறை,

நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் ரெயில் நிலையத்தில் பாயிண்ட்ஸ் மேன்களாக ராம்குமார், நந்தகோபால், தினேஷ் ஆகியோர் பணியாற்றுகிறார்கள். நேற்று காலை என்ஜின் டிரைவர் பிரணவ் காலி பெட்டிகளுடன் கூடிய ரெயிலை ஒரு தண்டவாளத்தில் இருந்து மற்றொரு தண்டவாளத்துக்கு மாற்றும் பணியில் ஈடுபட்டார். அப்போது பாயிண்ட்ஸ் மேன்கள் காட்டிய சிக்னல் சரிவர தெரியவில்லை என என்ஜின் டிரைவர் அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

அப்போது என்ஜின் டிரைவர் பிரணவுக்கும் பாயிண்ட்ஸ்மேன்கள் ராம்குமார், நந்தகோபால், தினேஷ் ஆகியோருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். இதில் காயமடைந்த பிரணவ், நந்தகோபால், தினேஷ், ராம்குமார் ஆகிய 4 பேரும் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். இது குறித்து மயிலாடுதுறை ரெயில்வே போலீஸ் நிலையத்தில் இரு தரப்பினரும் புகார் செய்தனர். இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story