அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்
அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்.
அரியலூர்,
அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி. பயின்று தேர்ச்சியடையாதவர்கள் முதல் பட்டதாரிகள் வரை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து தொடர்ந்து புதுப்பித்தல் செய்து 5 வருடங்களுக்கு மேலாக வேலைவாய்ப்பின்றி காத்திருக்கும் பதிவுதாரர்களுக்கு, வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித் தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் விண்ணப்பப்படிவங்கள் வழங்கப்படுகிறது. மாற்றுத்திறனாளிகள் எஸ்.எஸ்.எல்.சி. பயின்று தேர்ச்சியடையாதவர்கள் முதல் பட்டதாரிகள் வரை தங்களது கல்வித்தகுதியை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஒரு ஆண்டு முடிவடைந்திருக்க வேண்டும். 30.9.2018 அன்று தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் 45 வயதிற்குள்ளும், மற்றவர்கள் 40 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும். விண்ணப்பதாரர் எந்தவொரு கல்வி நிறுவனத்திலும் கல்வி பயிலுபவராக இருத்தல் கூடாது. ஆனால், தொலைதூர கல்வி பயிலுபவராக இருக்கலாம். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.50 ஆயிரத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
மாற்றுத்திறனாளிகளுக்கு வருமான வரம்பு ஏதுமில்லை. வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை திட்டத்திற்குரிய விண்ணப்பத்தினை அலுவலக வேலை நாட்களில் முற்பகலில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு அடையாள அட்டையுடன் நேரில் வந்து பெற்றுகொள்ளலாம். மேலும் மாற்றுத்திறனாளி அல்லாதோர் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை அனைத்து அசல் கல்விசான்றுகள் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு அடையாள அட்டையுடனும், மாற்றுத்திறனாளிகள் மேற்படி சான்றுகளுடன் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டையுடன் அடுத்த மாதம் (நவம்பர்) 30-ந்தேதிக்குள் அந்தந்த மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் நேரில் சமர்ப்பிக்க வேண்டும்.
இந்த தகவல் அரியலூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள கலெக்டர் அலுவலகங்களில் இருந்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Tags :
Next Story