மாவட்ட செய்திகள்

சுத்தமான குடிநீர் வழங்க கோரி குளச்சல் நகராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை + "||" + Public Siege of the Municipal Corporation of Kolachal for demanding clean drinking water

சுத்தமான குடிநீர் வழங்க கோரி குளச்சல் நகராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை

சுத்தமான குடிநீர் வழங்க கோரி குளச்சல் நகராட்சி அலுவலகத்தை  பொதுமக்கள் முற்றுகை
சுத்தமான குடிநீர் வழங்க கோரி குளச்சல் நகராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள்.
குளச்சல்,

குளச்சல் நகராட்சிகுட்பட்ட  கொட்டில்பாடு, சுனாமி காலனி, சிங்காரவேலர் காலனி, அந்தோணியார் காலனி, களிமார், பி.எஸ்.புரம், கிரீன்தெரு, ஈழக்காணி தெரு, முகைதீன் பள்ளி தெரு, வாய்க்கால் தெரு ஆகிய பகுதி மக்களுக்கு கடந்த ஒரு ஆண்டாக உப்பான குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இதனை பொதுமக்களால் குடிக்க முடியவில்லை.


 எனவே சுத்தமான குடிநீர் வழங்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்தி வந்தனர்.

இந்நிலையில் நேற்று காலை அப்பகுதியை சேர்ந்த பெண்கள் உள்பட ஏராளமான பொதுமக்கள் குளச்சல் நகராட்சி அலுவலக வளாகத்தில் திரண்டனர். பின்னர் அலுவலகம் முன் அமர்ந்து முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, அவர்கள் சுத்தமான குடிநீர் வழங்க வேண்டும் என கோ‌ஷமிட்டனர். போராட்டத்தில் குளச்சல் நகர தி.மு.க.பொறுப்பாளர் ரகீம், மாவட்ட மீனவர் அணி துணை அமைப்பாளர் பனிக்குருசு, முன்னாள் கவுன்சிலர்கள் நூர்முகம்மது, லாரன்ஸ், நசீம், ஜெயக்குமார், சுரேஷ், டென்னிஸ் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

 இதுபற்றி தகவல் அறிந்த குளச்சல் சப்– இன்ஸ்பெக்டர் சுஜித் ஆனந்த் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, நகராட்சி பொறியாளர் சுரேஷ் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தினார். முடிவில் விரைவில் சுத்தமான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், இதற்கான பணிகள் இன்று (வியாழக்கிழமை) தொடங்கப்படும் என்றும் அதிகாரிகள் உறுதியளித்தனர். அதைதொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர்.

இந்த திடீர் போராட்டத்தால் நகராட்சி அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


தொடர்புடைய செய்திகள்

1. முதல்-அமைச்சர் அறிவித்தபடி திருச்சி கொட்டப்பட்டில் பஸ் நிலையம் அமைக்கப்படாதது ஏன்? பொதுமக்கள் கேள்வி
திருச்சி கொட்டப்பட்டில் ஒருங்கிணைந்த பஸ் நிலையம் அமைக்கப் படும் என்ற முதல்- அமைச்சரின் அறிவிப்பு ஒரு ஆண்டாகியும் செயல்படுத்தப்படவில்லை. இதனால் இந்த திட்டம் கைவிடப்பட்டதா? என்று பொதுமக்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.
2. கும்மிடிப்பூண்டி பஜாரில் மதுக்கடையை மூடக்கோரி பொதுமக்கள் மீண்டும் முற்றுகை
கும்மிடிப்பூண்டி பஜாரில் புதிதாக திறக்கப்பட்ட மதுக்கடையை மூடக்கோரி பொதுமக்கள் மீண்டும் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
3. கூட்டு குடிநீர் குழாய் உடைந்து வீணாகும் தண்ணீர் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை
வாய்மேடு அருகே கூட்டு குடிநீர் குழாய் உடைந்து வீணாக செல்லும் தண்ணீரை உடனே சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
4. சேதராப்பட்டில் தைலமரங்களை வெட்டி கடத்த முயன்ற கும்பல்; பொதுமக்கள் தடுத்து நிறுத்தினர்
சேதராப்பட்டு சந்திராயன் குளக்கரையில் இருந்த தைலமரங்களை வெட்டி கடத்த முயன்ற மர்ம கும்பலை பொதுமக்கள் தடுத்து நிறுத்தனர்.
5. குருந்தன்கோடு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் குடிநீர் கேட்டு பெண்கள் முற்றுகை
குருந்தன்கோடு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர்.