மாவட்ட செய்திகள்

திருமண்டங்குடியில் சர்க்கரை ஆலை ஊழியர்கள் 10-வது நாளாக உண்ணாவிரதம் + "||" + Sugar mill workers at Thirunandankadu fast for 10th day

திருமண்டங்குடியில் சர்க்கரை ஆலை ஊழியர்கள் 10-வது நாளாக உண்ணாவிரதம்

திருமண்டங்குடியில் சர்க்கரை ஆலை ஊழியர்கள் 10-வது நாளாக உண்ணாவிரதம்
திருமண்டங்குடியில் சர்க்கரை ஆலை ஊழியர்கள் நேற்று 10-வது நாளாக உண்ணாவிரதம் இருந்தனர்.
கபிஸ்தலம்,

தஞ்சை மாவட்டம் கபிஸ்தலம் அருகே உள்ள திருமண்டங்குடியில் தனியார் சர்க்கரை ஆலை இயங்கி வருகிறது. இங்கு பணியாற்றி வரும் ஊழியர்களுக்கு கடந்த 6 மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை. இந்த நிலையில் சம்பளத்தை உடனடியாக வழங்கக்கோரி கடந்த 1-ந் தேதி முதல் ஆலை முன்பு ஊழியர்கள் உண்ணாவிரதம் இருந்து வருகிறார்கள்.


இந்த உண்ணாவிரத போராட்டத்துக்கு தி.மு.க., பா.ம.க. காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்து உள்ளனர். நேற்று 10-வது நாளாக உண்ணாவிரத போராட்டம் நடந்தது. இதில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகிகள் ஜெயராமன், கிருஷ்ணசாமி, ஆனந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டு போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

சர்க்கரை ஆலை நிர்வாகிகளிடம் வருவாய்த்துறையினர் மற்றும் போலீசார் பல முறை பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் சம்பளம் வழங்க ஆலை நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்கவில்லை.

இந்த நிலையில் சம்பளம் கிடைக்கும் வரை உண்ணாவிரத போராட்டம் தொடரும் என ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். 


தொடர்புடைய செய்திகள்

1. புயலால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரணம் வழங்க வலியுறுத்தி 4 மாவட்டங்களில் 18-ந் தேதி உண்ணாவிரதம்
புயலால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரணம் வழங்க வலியுறுத்தி 4 மாவட்டங்களில் 18-ந் தேதி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட வேண்டும் என இந்திய கம்யூனிஸ்டு கட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
2. 5–வது நாளாக உண்ணாவிரதம்: தண்டனை கைதிகள் மேலும் 5 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதி
காலாப்பட்டு சிறையில் 5–வது நாளாக உண்ணாவிரதம் இருந்த தண்டனை கைதிகள் மேலும் 5 பேர் நேற்று புதுவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.
3. இ-சேவை மைய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
தமிழக அரசு சார்பில் கேபிள் டி.வி. நிறுவனம், இ-சேவை மற்றும் ஆதார் சேவை மையம் செயல்பட்டு வருகிறது.
4. 4–வது நாளாக உண்ணாவிரதம்: தண்டனை கைதிகளில் மேலும் 2 பேர் மயக்கம்
புதுவை சிறையில் தண்டனை கைதிகள் நேற்று 4–வது நாளாக உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். இதில் மேலும் 2 பேர் மயக்கம் அடைந்தனர்.
5. லோக்பால் அமைக்காவிட்டால் ஜனவரி 30-ந் தேதி முதல் உண்ணாவிரதம் மத்திய அரசுக்கு, அன்னா ஹசாரே எச்சரிக்கை
லோக்பால் அமைக்காவிட்டால் ஜனவரி 30-ந் தேதி முதல் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடப்போவதாக காந்தியவாதி அன்னா ஹசாரே மத்திய அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அதிகம் வாசிக்கப்பட்டவை