மாவட்ட செய்திகள்

திருவள்ளூர் அருகே கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை + "||" + College student suicide

திருவள்ளூர் அருகே கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை

திருவள்ளூர் அருகே கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை
தீராத வயிற்று வலி காரணமாக, கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

திருவள்ளூர்,

திருவள்ளூரை அடுத்த காக்களூர் சக்தி நகரைச் சேர்ந்தவர் இளங்கோவன். இவருடைய மகன் முல்லைவேந்தன்(வயது 20). இவர், சென்னையில் உள்ள ஒரு கல்லூரியில் பி.எஸ்சி. கணிதம் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

கடந்த சில மாதங்களாக முல்லைவேந்தன் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதற்காக அவர் பல மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றும், அவருக்கு வயிற்று வலி குணமாகவில்லை என தெரிகிறது.

இந்தநிலையில் நேற்று முன்தினம் மீண்டும் முல்லைவேந்தனுக்கு வயிற்று வலி ஏற்பட்டது. இதனால் மனம் உடைந்த அவர், தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின்விசிறியில் புடவையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இதுபற்றி தகவல் அறிந்துவந்த திருவள்ளூர் தாலுகா போலீசார், மாணவர் முல்லைவேந்தன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.தொடர்புடைய செய்திகள்

1. மருத்துவ கல்லூரியில் இடம் வாங்கி தருவதாக திரைப்பட இயக்குனரிடம் ரூ.50 லட்சம் மோசடி; உரக்கடைக்காரர் கைது
திரைப்பட இயக்குனரின் மகளுக்கு மருத்துவ கல்லூரியில் எம்.பி.பி.எஸ். சீட் வாங்கி கொடுப்பதாக ரூ.50 லட்சம் மோசடி செய்த உரக்கடைக்காரர் கைது செய்யப்பட்டார்.
2. மதுரையில் பரபரப்பு: பெற்ற குழந்தையை கழுத்தை அறுத்து கொன்ற பெண் என்ஜினீயர்
மதுரையில் பெற்ற குழந்தையை கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு, பெண் என்ஜினீயர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
3. அருப்புக்கோட்டை அருகே சாலை வசதி கோரி கல்லூரி மாணவர்கள் போராட்டம்
அருப்புக்கோட்டை அருகே சாலை வசதி கேட்டு கல்லூரி மாணவ, மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
4. தர்மபுரியில் அரசு கல்லூரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
அரசு கல்லூரி ஆசிரியர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி தர்மபுரி அரசு கலைக்கல்லூரி முன்பு நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
5. கல்லூரி பேராசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகம் சார்பில், புதுக்கோட்டையில் உள்ள மன்னர் கல்லூரி முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.