மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் சரிபார்ப்பு அனைத்து கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் நடந்தது
மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் சரிபார்க்கும் பணி அனைத்து கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் நடந்தது.
புதுக்கோட்டை,
இந்திய தேர்தல் ஆணையத்தால் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு வந்திறங்கிய மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை அனைத்து கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் கலெக்டர் கணேஷ் சரிபார்த்தார். பின்னர் அவர் கூறியதாவது:- இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி எதிர்வரும் பாராளுமன்ற பொதுதேர்தல்கள் 2019-ம் ஆண்டுக்காக புதுக்கோட்டை மாவட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பெங்களூரு பாரத் மின்னணு நிறுவனத்திட மிருந்து புதுக்கோட்டைக்கு வரப்பெற்றுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட 3,820 வாக்குப்பதிவு எந்திரங்கள், 2,080 கட்டுப்பாட்டு கருவிகள் மற்றும் 2,080 காகித தணிக்கை கருவிகளின் முதற்கட்ட சோதனை பாரத் மின்னணு நிறுவன மின் பொறியாளர்களால் தொடங்கப்பட்டுள்ளது.
மேலும், சோதனை முடிக்கப்பட்ட எந்திரங்கள் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திர பாதுகாப்பு வைப்பு அறையிலேயே வைக்்கப்பட உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார். மாவட்ட வருவாய் அதிகாரி ராமசாமி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொறுப்பு) முகமது ஜாகீர்உசேன், தனி வட்டாட்சியர் (தேர்தல்) வரதராஜன், அனைத்து கட்சி பிரமுகர்கள் மற்றும் தொடர்புடைய அரசு அலுவலர்கள் உள்பட பலர் உடன் இருந்தனர்.

Related Tags :
Next Story