மாவட்ட செய்திகள்

திருவண்ணாமலையில் : போலி ரப்பர் ஸ்டாம்ப் தயாரித்த 3 பேர் கைது - மாவட்ட நீதிபதி நேரடி ஆய்வில் சிக்கினர் + "||" + In Tiruvannamalai: Three persons arrested for producing fake rubber stamp - District Judge trapped in direct study

திருவண்ணாமலையில் : போலி ரப்பர் ஸ்டாம்ப் தயாரித்த 3 பேர் கைது - மாவட்ட நீதிபதி நேரடி ஆய்வில் சிக்கினர்

திருவண்ணாமலையில் : போலி ரப்பர் ஸ்டாம்ப் தயாரித்த 3 பேர் கைது - மாவட்ட நீதிபதி நேரடி ஆய்வில் சிக்கினர்
திருவண்ணாமலையில் போலி ரப்பர் ஸ்டாம்ப் தயாரித்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருவண்ணாமலை,


திருவண்ணாமலை மாவட்ட நீதிமன்றங்களில் பல்வேறு வழக்கு கோப்புகளில் பயன்படுத்தப்படும் ரப்பர் ஸ்டாம்ப் போலியானது என மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவிற்கு புகார்கள் சென்றன. இதையடுத்து சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவரும், மாவட்ட நீதிபதியுமான மகிழேந்தி விசாரணை மேற்கொண்டார். அதில் நீதிமன்ற வழக்கு கோப்புகளில் பயன்படுத்தப்பட்ட ரப்பர் ஸ்டாம்ப் போலியானது என்பது தெரியவந்தது.

மேலும் விசாரணையில் இவை திருவண்ணாமலை பெரியார் சிலை, கட்டபொம்மன் தெரு, மத்தலாங்குளத்தெருவில் உள்ள ஜெராக்ஸ், ரப்பர் ஸ்டாம்ப் தயாரிக்கும் கடைகளில் அரசு அனுமதியின்றி தயாரிக்கப்படுகிறது என்பது தெரியவந்தது.

இதையடுத்து நேற்று மாவட்ட முதன்மை நீதிபதி மகிழேந்தி, சார்பு நீதிபதி ராஜ்மோகன் ஆகியோர் அந்த பகுதியில் உள்ள 3 கடைகளில் திடீரென ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது அந்த கடைகளில் அரசு அனுமதியின்றி நீதிபதி, அரசு அலுவலர்கள் சார்ந்த போலி ரப்பர் ஸ்டாம்ப்கள் தயாரிக்கப்பட்டது தெரியவந்தது. அந்த கடைகளில் இருந்து போலி ரப்பர் ஸ்டாம்ப்களை நீதிபதிகள் பறிமுதல் செய்தனர்.

மேலும் அவற்றை தயாரித்த அரிகிருஷ்ணன் (வயது 32), கதிரேசன் (49), டெல்லிபாபு (35) ஆகிய 3 பேரையும் பிடித்து திருவண்ணாமலை கிழக்கு, டவுன் போலீசில் ஒப்படைத்தனர்.

இதனையடுத்து போலீசார், அவர்கள் 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 


தொடர்புடைய செய்திகள்

1. வேப்பந்தட்டை அருகே: போலீசார் என்று கூறி நாடகமாடிய 3 பேர் கைது - தப்பியோடியவருக்கு வலைவீச்சு
வேப்பந்தட்டை அருகே போலீசார் என்று கூறி நாடகமாடிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் தப்பியோடியவரை வலைவீசி தேடி வருகின்றனர்.
2. பெருமாநல்லூர் பகுதியில்: தொடர் திருட்டில் ஈடுபட்ட 3 பேர் கைது
பெருமாநல்லூர் பகுதியில் தொடர் திருட்டில் ஈடுபட்ட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
3. மாங்காடு அருகே வாய்த்தகராறில் வாலிபர் வெட்டிக்கொலை 3 பேர் கைது
மாங்காடு அருகே, வாய்த்தகராறில் வாலிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். அவரது நண்பர் படுகாயம் அடைந்தார். இது தொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
4. குழந்தைகளுடன் பெண் இறந்த வழக்கில் கணவர் உள்பட 3 பேர் கைது
திருக்கோவிலூர் அருகே குழந்தைகளுடன் பெண் இறந்த வழக்கில் கணவர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். கொடுமைப்படுத்தியதால் குழந்தைகளுடன் அவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டது போலீஸ் விசாரணையில் அம்பலமானது.
5. தண்டவாளத்தில் சிமெண்டு பலகை வைத்த ஐ.டி.ஐ. மாணவர்கள் 3 பேர் கைது
வேளச்சேரி ரெயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் 2 முறை சிமெண்டு பலகைகளை வைத்த ஐ.டி.ஐ. மாணவர்கள் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.