மாவட்ட செய்திகள்

ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம் + "||" + Rural Development Officers Demonstration

ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் தாந்தோன்றி ஊராட்சி ஒன்றிய வட்டக்கிளை சார்பில், கரூர் கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
கரூர்,

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் தாந்தோன்றி ஊராட்சி ஒன்றிய வட்டக்கிளை சார்பில், கரூர் கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாநில செயற்குழு உறுப்பினர் சரவணன் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் தமிழ்வாணன் முன்னிலை வகித்தார். அரசின் திட்டப்பணிகளை நிறைவேற்றிட கடுமையான நெருக்கடி கொடுக்காமல் அதற்கு போதிய கால அவகாசம் வழங்க வேண்டும். வளர்ச்சித்துறை பணிகளை பிறதுறை அலுவலர்களை வைத்து மேற்கொள்வதை கைவிட வேண்டும், விடுமுறை நாட்களில் ஆய்வுகள், ஆய்வு கூட்டம் நடத்துவதை தவிர்க்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க கரூர் மாவட்ட செயலாளர் சக்திவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


தொடர்புடைய செய்திகள்

1. போக்குவரத்து கழகங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்ய கோரி அனைத்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
போக்குவரத்து கழகங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்ய கோரி தஞ்சையில் 3 இடங்களில் அனைத்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
2. கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து கழக தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து கழக தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
3. 25 சதவீத போனஸ் வழங்க வலியுறுத்தி அரசு போக்குவரத்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நாகையில் நடந்தது
25 சதவீத போனஸ் வழங்க வலியுறுத்தி நாகையில் அரசு போக்குவரத்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
4. 25 சதவீத போனஸ் வழங்கக்கோரி போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
25 சதவீத போனஸ் வழங்கக்கோரி திருவாரூரில் போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
5. விவசாயிகளுக்கு பாரபட்சமின்றி கடன் வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம் உழவர் பேரியக்கம் சார்பில் நடந்தது
விவசாயிகளுக்கு பாரபட்சமின்றி கடன் வழங்கக்கோரி உழவர் பேரியக்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.