மாவட்ட செய்திகள்

9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து ஓய்வூதியர் சங்க கூட்டமைப்பினர் தொடர் முழக்க ஆர்ப்பாட்டம் + "||" + All the Pensioners Association Alliance demonstrates a series of slogans demanding 9-point demands

9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து ஓய்வூதியர் சங்க கூட்டமைப்பினர் தொடர் முழக்க ஆர்ப்பாட்டம்

9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து ஓய்வூதியர் சங்க கூட்டமைப்பினர் தொடர் முழக்க ஆர்ப்பாட்டம்
9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சியில் அனைத்து ஓய்வூதியர் சங்க கூட்டமைப்பினர் தொடர் முழக்க ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
திருச்சி,

திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகில் நேற்று தமிழ்நாடு அனைத்து ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் தொடர் முழக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு ஏற்ப ஓய்வூதியத்தை வருமான வரி சட்டத்தின் கீழ் இணைக்க கூடாது, 21 மாத ஊதிய உயர்வு நிலுவை தொகை பயன்களை உடனே வழங்கவேண்டும், புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், 2006-க்கு முன் ஓய்வு பெற்றவர்களுக்கு ‘கிரேடு பே’ வழங்கி ஓய்வூதிய திருத்தம் செய்யப்படவேண்டும், புதிய மருத்துவ காப்பீடு திட்டத்தை மின்வாரியம், போக்குவரத்து, சென்னை குடிநீர் துறைகளுக்கு அமல்படுத்தவேண்டும், 2007 நவம்பர் மாதத்திற்கு பின் ஓய்வு பெற்ற அரசு போக்குவரத்து ஊழியர்களுக்கு ஓய்வூதியம் உள்ளிட்ட ஓய்வு கால பயன்களை வழங்கவேண்டும், மின்வாரிய ஊழியர்களுக்கு வைரவிழா சலுகை வழங்கவேண்டும் என்பன உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த தொடர் முழக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


ஆர்ப்பாட்டத்துக்கு கூட்டமைப்பின் மாவட்ட தலைவர் சிராஜுதீன் தலைமை தாங்கினார். செயலாளர் ஆதி குருசாமி, கூட்டமைப்பு நிர்வாகிகள் செந்தமிழ் செல்வன், மதிவாணன், சின்னசாமி ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள். கோரிக்கைகளை கோஷங்களாக எழுப்பி நீண்ட நேரம் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். முடிவில் புருசோத்தமன் நன்றி கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. பொள்ளாச்சி பாலியல் சம்பவம்: தஞ்சையில் அரசு கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தை கண்டித்து தஞ்சையில் அரசு கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
2. பொள்ளாச்சி பாலியல் வன்முறையை கண்டித்து அரசு கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
பொள்ளாச்சி பாலியல் வன்முறையை கண்டித்து அரசு கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
3. பொள்ளாச்சி பாலியல் வன்முறை சம்பவத்தை கண்டித்து கல்லூரி மாணவ, மாணவிகள் ஆர்ப்பாட்டம்
பொள்ளாச்சி பாலியல் வன்முறை சம்பவத்தை கண்டித்து மார்த்தாண்டத்தில் கல்லூரி மாணவ, மாணவிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
4. அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தினர் ஆர்ப்பாட்டம் பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தை கண்டித்து நடந்தது
பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தை கண்டித்து திருவாரூரில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
5. ஓய்வூதிய திட்டத்தை அரசே பொறுப்பேற்று நடத்தக்கோரி ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
ஓய்வூதிய திட்டத்தை அரசே பொறுப்பேற்று நடத்தக்கோரி ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அதிகம் வாசிக்கப்பட்டவை