திருவாரூரில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம் பதவி உயர்வு வழங்க வலியுறுத்தல்


திருவாரூரில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம் பதவி உயர்வு வழங்க வலியுறுத்தல்
x
தினத்தந்தி 11 Oct 2018 10:45 PM GMT (Updated: 11 Oct 2018 6:53 PM GMT)

பதவி உயர்வு வழங்க வலியுறுத்தி திருவாரூரில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவாரூர்,

திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் சுந்தரலிங்கம் தலைமை தாங்கினார்.

மாவட்ட செயலாளர் வசந்தன், மாநில செயற்குழு உறுப்பினர் ராஜசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில துணைத்தலைவர் புஷ்பநாதன், அரசு ஊழியர் சங்க மாநில செயலாளர் சவுந்தரராஜன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். விடுமுறை நாட்களிலும், இரவு நேரங்களிலும் ஆய்வு கூட்டங்கள் நடத்துவதை கைவிட வேண்டும்.

திருவாரூர் ஊரக வளர்ச்சித்துறையில் காலியாக உள்ள 25 உதவியாளர் பணியிடங்களை பதவி உயர்வு மூலமாக நிரப்ப வேண்டும். ஊராட்சி செயலாளர்களுக்கு எழுத்தருக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். சாலை ஆய்வாளர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும் என்பன உள்பட 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் சோமசுந்தரம், மாவட்ட பொருளாளர் மூர்த்தி, சங்கத்தின் மாவட்ட பொருளாளர் செந்தில், மாவட்ட துணைத்தலைவர்கள் சிவக்குமார், சுப்பிரமணியன், முருகானந்தம், ராஜசேகரன், மாவட்ட இணை செயலாளர்கள் தமிழ்ச்செல்வன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story