8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஓய்வூதியர் சங்கத்தினர் தர்ணா நாகையில் நடந்தது
8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஓய்வூதியர் சங்கத்தினர் நாகையில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நாகப்பட்டினம்,
தமிழ்நாடு அனைத்துத்துறை ஓய்வூதியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாகையில் தர்ணா போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு ஓய்வூதிய சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் பக்கிரிசாமி தலைமை தாங்கினார். கூட்டமைப்பு மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, ஓய்வூதியர் சங்க மாவட்ட தலைவர் நடராஜன், ஓய்வுபெற்ற அனைத்து ஆசிரியர் சங்க மாநில பொதுக்குழு உறுப்பினர் பாலசுப்பிரமணியன், ஓய்வுபெற்ற போக்குவரத்து நல அமைப்பு தலைவர் கணபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் அன்பழகன், ஓய்வுபெற்ற சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர் சங்க மாவட்ட அமைப்பாளர் மதிவாணன் ஆகியோர் வரவேற்றனர்.
ஓய்வுபெற்ற மின்வாரிய நல அமைப்பு தலைவர் திருநாவுக்கரசு, இந்திய தொழிற்சங்க மைய மாவட்ட செயலாளர் சீனிமணி, ஓய்வூதியர் சங்க மாநில துணைத்தலைவர் கணேசன் ஆகியோர் கலந்துகொண்டு பேசினர்.
சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின்படி ஓய்வூதியத்தை வருமானவரி சட்டத்தில் இணைக்கக்கூடாது. 21 மாத ஊதிய உயர்வு நிலுவை பலன்களை வழங்க வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.
போராட்டத்தில் ஓய்வூதியர் சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் ஓய்வூதியர் சங்க நாகை வட்ட தலைவர் காதர்மொகிதீன் நன்றி கூறினார்.

Related Tags :
Next Story