மாவட்ட செய்திகள்

ஊழல்கள் குறித்து வீடுகள் தோறும் பிரசாரம் செய்ய வேண்டும் அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் பேட்டி + "||" + All India Congress Secretary should interview the House of Representatives about corruption

ஊழல்கள் குறித்து வீடுகள் தோறும் பிரசாரம் செய்ய வேண்டும் அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் பேட்டி

ஊழல்கள் குறித்து வீடுகள் தோறும் பிரசாரம் செய்ய வேண்டும் அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் பேட்டி
ஊழல்கள் குறித்தும் வீடுகள் தோறும் பிரசாரம் செய்ய வேண்டும் என்று அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் சிரிவெல்ல பிரசாத் கூறினார்.
தாமரைக்குளம்,

அரியலூரில் காங்கிரஸ் கட்சியின் வாக்குச்சாவடி தலைவர்கள் பிரதிநிதிகள் மற்றும் செயல்வீரர்கள் கூட்டம் நேற்று தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. மாவட்ட தலைவர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செயலாளரும் தமிழக பொறுப்பாளருமான சிரிவெல்ல பிரசாத் கலந்துகொண்டு வாக்குச்சாவடி தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளின் ஆலோசனைகளை கேட்டறிந்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-


வரக்கூடிய நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் உள்ளாட்சி மன்ற தேர்தலுக்கான ஆலோசனை கூட்டம் தற்போது நடைபெற்றது. இக்கூட்டத்தில் கட்சியின் நிர்வாகிகள் எவ்வாறு தேர்தலை எதிர்கொள்வது, தேர்தலுக்கான பிரசாரம் எவ்வாறு இருக்க வேண்டும் என்பது குறித்து ஆலோசனை செய்யப்பட்டு உள்ளது. மேலும் தற்போது நடைபெற்று வரும் மத்திய பா.ஜ.க. அரசின் மக்கள் விரோதப் போக்கு மற்றும் நடைபெற்று வரும் ஊழல்கள் குறித்து வீடுகள் தோறும் காங்கிரஸ் கட்சியினர் திண்ணை பிரசாரம் செய்ய வேண்டும்.

கடந்த காங்கிரஸ் கட்சியின் ஆட்சி காலத்தில் நடைபெற்ற மக்கள் நல திட்டங்கள், வேலைவாய்ப்புகள், நாட்டின் பொருளாதார நிலைமை உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் குறித்து வாக்காளர்களுக்கு எடுத்துரைக்க வேண்டும். இதன் மூலம் காங்கிரஸ் கட்சிக்கு வாக்காளர்கள் வாக்களிக்க கட்சியினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கூறினார். மேலும் நிர்வாகிகளின் கோரிக்கைகள் அனைத்தும் தலைமையிடம் எடுத்துரைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறினார்.

கூட்டத்தில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பிற்படுத்தப்பட்டோர் பிரிவு தேசிய ஒருங்கிணைப்பாளர் அறிவழகன், மாவட்ட முன்னாள் தலைவர் பாலகிருஷ்ணன், மாவட்ட மகளிரணி தலைவர் மாரியம்மாள் உள்பட மாவட்ட ஒன்றிய, நகர நிர்வாகிகள், அனைத்து அணி பொறுப்பாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


தொடர்புடைய செய்திகள்

1. ஆயுதபூஜையை முன்னிட்டு பொருட்கள் வாங்க அலைமோதிய கூட்டம் - பூ விலை அதிகரிப்பு
வேலூரில் ஆயுதபூஜையை முன்னிட்டு நேற்று பூஜைபொருட்கள் வாங்க சாலைகளில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. பூ வரத்து குறைவு காரணமாக விலை அதிகரித்திருந்தது.
2. முத்துப்பேட்டை பேரூராட்சியில் வரி உயர்த்தும் திட்டத்தை எதிர்த்து போராட்டம் காங்கிரஸ் கூட்டத்தில் தீர்மானம்
முத்துப்பேட்டை பேரூராட்சியில் வரி உயர்த்தும் திட்டத்தை எதிர்த்து போராட்டம் நடத்தப்படும் என நகர காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
3. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தத்துக்கு விண்ணப்பிக்கலாம் கலெக்டர் தகவல்
குமரி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க மற்றும் திருத்தத்துக்கு 31-ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் பிரசாந்த் வடநேரே கூறினார்.
4. ஆக்கிரமிப்புகளை அகற்றி தார்ச்சாலை போட வேண்டும் இலுப்பைக்குடி கிராம மக்கள் கலெக்டரிடம் மனு
ஆக்கிரமிப்புகளை அகற்றி தார்ச்சாலை போட வேண்டும் என்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் இலுப்பைக்குடி கிராம மக்கள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.
5. வருகிற நாடாளுமன்ற தேர்தலில் ராகுல்காந்தியை பிரதமர் ஆக்குவதே ஒரே குறிக்கோள் காங்கிரஸ் செயலாளர் பேச்சு
வருகிற நாடாளுமன்ற தேர்தலில் ராகுல்காந்தியை பிரதமர் ஆக்குவதே நமது ஒரே குறிக்கோள் என காங்கிரஸ் செயலாளர் சஞ்சய்தத் பேசினார்.