மாவட்ட செய்திகள்

அறந்தாங்கி அருகே கோவில் குளத்தில் மீன்கள் செத்து மிதந்தன + "||" + In the temple pond, near the Aranthangi, the fish died

அறந்தாங்கி அருகே கோவில் குளத்தில் மீன்கள் செத்து மிதந்தன

அறந்தாங்கி அருகே கோவில் குளத்தில் மீன்கள் செத்து மிதந்தன
அறந்தாங்கி அருகே கோவில் குளத்தில் மீன்கள் செத்து மிதந்தன.
அறந்தாங்கி,

அறந்தாங்கி அருகே உள்ள திருனாளூர் தெற்கு பகுதியில் முத்துமாரியம்மன் கோவில் உள்ளது.பிரசித்தி பெற்ற இக்கோவிலுக்கு உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து வந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்வர்.இந்நிலையில் இக்கோவிலுக்கு சொந்தமாக குளம் உள்ளது. இக்குளத்தில் ஏராளமான மீன்கள் வளர்க்கப்பட்டு வந்தது.மேலும் இக்குளத்தை பொதுமக்கள் குளிக்கவும் பயன்படுத்தி வந்தனர்.


செத்து மிதந்தன

இந்நிலையில் நேற்று முன்தினம் வழக்கம்போல் அப்பகுதி பொதுமக்கள் குளத்திற்கு குளிக்க சென்றனர். அப்போது குளத்தில் உள்ள மீன்கள் செத்து மிதந்தன. இதைக்கண்ட பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அந்த மீன்களை பொதுமக்கள் எடுத்து ஒரு இடத்தில் குவித்து வைத்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த வருவாய் துறை அதிகாரிகள் கோவில் குளத்தை பார்வையிட்டனர். மேலும் மீன்கள் எப்படி செத்தது? விஷம் வைத்து கொல்லப்பட்டதா? என விசாரணை நடத்தினர்.


தொடர்புடைய செய்திகள்

1. தமிழகத்தில் ரசாயனம் கலந்த மீன்கள் விற்பனை கும்பகோணத்தில் 100 கிலோ மீன்கள் பறிமுதல்
தமிழகத்தில் அதிகாரிகளின் ஆய்வின்போது பல பகுதிகளில் ரசாயனம் கலந்த மீன்கள் விற்பனை செய்யப்படும் அதிர்ச்சி தகவல் தெரிய வந்துள்ளது. கும்பகோணத்தில் 100 கிலோ மீன்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து அழித்தனர்.