மாவட்ட செய்திகள்

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 13 ஆயிரம் கனஅடியாக குறைந்தது + "||" + Water supply to Okhanakkal reduced by 13 thousand cubic feet

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 13 ஆயிரம் கனஅடியாக குறைந்தது

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 13 ஆயிரம் கனஅடியாக குறைந்தது
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 13 ஆயிரம் கனஅடியாக குறைந்தது.
பென்னாகரம்,

கர்நாடக-தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் வினாடிக்கு 8,500 கனஅடி தண்ணீர் வந்தது. இந்த நீர்வரத்து நேற்று படிப்படியாக அதிகரித்து காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 15 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது.


இதனால் ஒகேனக்கல் மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் ஆர்ப்பரித்து கொட்டியது. மேலும் காவிரி ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. நேற்று காலை ஒகேனக்கல்லுக்கு வந்த சுற்றுலா பயணிகள் மெயின் அருவியில் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர். மேலும் அவர்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் காவிரி ஆற்றில் பரிசல் சவாரி செய்தனர். மேலும் அவர்கள் தொங்கு பாலத்தில் நின்றவாறு காவிரி ஆற்றின் அழகை கண்டு ரசித்தனர்.

இந்தநிலையில் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து நேற்று மாலை 5 மணி நிலவரப்படி வினாடிக்கு 13 ஆயிரம் கனஅடியாக குறைந்தது. ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்ததையடுத்து கர்நாடக- தமிழக எல்லையில் காவிரி நுழைவிடமான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தண்ணீரை அளந்து கண்காணித்து வருகின்றனர்.


தொடர்புடைய செய்திகள்

1. 21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம நிர்வாக அதிகாரிகள் தொடர் போராட்டம்
21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம நிர்வாக அதிகாரிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
2. உலகைச்சுற்றி...
இந்தோனேசியாவில் ஜாவா மாகாணத்தில் ஏற்பட்ட மழை, வெள்ளம், நிலச்சரிவில் 4 பேர் பலியாகினர்.
3. காரைக்குடி பகுதியில் பலத்த மழை சாலைகளில் வெள்ளம் போல் ஓடிய மழைநீர்
காரைக்குடி பகுதியில் நேற்று மாலை ஒரு மணி நேரம் பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
4. மழைக்கால நிவாரணம் வழங்கக்கோரி கட்டுமான தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
புதுவை காந்திநகரில் உள்ள தொழிலாளர் நலத்துறை அலுவலகம் முன்பு புதுவை மாவட்ட கட்டிட மற்றும் கட்டுமான தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
5. திருச்சியில் பலத்த மழை: விமானம் இறங்கும் போது இறக்கை தரையில் தட்டியதாக பரபரப்பு
திருச்சியில் பலத்த மழையால் விமானம் தரை இறங்கும் போது, இறக்கை தரையில் தட்டியதாக விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.