மாவட்ட செய்திகள்

சேலத்தில் உற்பத்தி பொருட்கள் கண்காட்சி-விற்பனை பன்னீர்செல்வம் எம்.பி. தொடங்கி வைத்தார் + "||" + In Salem Production Exhibition Sales Panneerselvam MP Started

சேலத்தில் உற்பத்தி பொருட்கள் கண்காட்சி-விற்பனை பன்னீர்செல்வம் எம்.பி. தொடங்கி வைத்தார்

சேலத்தில் உற்பத்தி பொருட்கள் கண்காட்சி-விற்பனை பன்னீர்செல்வம் எம்.பி. தொடங்கி வைத்தார்
உற்பத்தி செய்த பொருட்கள் கண்காட்சி மற்றும் விற்பனை சேலம் கடை வீதியில் உள்ள வாசவி மகாலில் நேற்று நடைபெற்றது. இந்த கண்காட்சியை பன்னீர்செல்வம் எம்.பி. ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார்.
சேலம்,

பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தை சேர்ந்த பயனாளிகள் உற்பத்தி செய்த பொருட்கள் கண்காட்சி மற்றும் விற்பனை சேலம் கடை வீதியில் உள்ள வாசவி மகாலில் நேற்று நடைபெற்றது. இந்த கண்காட்சியை பன்னீர்செல்வம் எம்.பி. ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார். கலெக்டர் ரோகிணி குத்துவிளக்கேற்றி கண்காட்சி அரங்குகளை பார்வையிட்டார். கே.வி.ஐ.சி. உதவி இயக்குனர்கள் வசிராஜன், பிரபாகர் ஆகியோர் பி.எம்.இ.ஜி.பி. திட்டம் குறித்து பேசினர்.


கண்காட்சியில், கதர் ஆடைகள், மெத்தை, தலையணை, சிறு தானிய உணவு பொருட்கள், காலணிகள், மரசெக்கு எண்ணெய் உள்ளிட்ட பொருட்கள் விற்பனைக்கு உள்ளன. மேலும் 15 சதவீதம் முதல் 35 சதவீதம் வரை மத்திய அரசின் மானியத்துடன் வங்கி கடன் மூலமாக புதிதாக கிராமம், நகர்ப்புறங்களில் தொழில் தொடங்க இக்கண்காட்சியில் உள்ள அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என நிர்வாகிகள் தெரிவித்தனர்.

இந்த நிகழ்ச்சியில் தொழிற்துறை பொதுமேலாளர் ராமச்சந்திரன், காதி கிராம தொழில் துறை வாரிய உதவி இயக்குனர் ரூபி அலிமாபாய், சர்க்கார் கொல்லப்பட்டி கிராம சேவா சங்க பொதுமேலாளர் கல்யாணசுந்தரம் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த கண்காட்சி மற்றும் விற்பனை இன்று (வெள்ளிக்கிழமை), நாளை (சனிக்கிழமை) என 2 நாட்கள் நடக்கிறது.


தொடர்புடைய செய்திகள்

1. சேலத்தில் பன்றிக்காய்ச்சலுக்கு பெண், முதியவர் பலி
சேலத்தில் பன்றிக்காய்ச்சலுக்கு பெண், முதியவர் பலியானார்கள்.
2. சேலத்தில் சர்கார் படத்துக்கு எதிராக அ.தி.மு.க.வினர் போராட்டம் பேனர்களை கிழித்து எறிந்ததால் பரபரப்பு
சேலத்தில் சர்கார் படத்துக்கு எதிராக அ.தி.மு.க.வினர் போராட்டம் நடத்தினர். தியேட்டர் முன்பு இருந்த பேனர்களை கிழித்து எறிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
3. சேலத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
பண மதிப்பிழப்பு நடவடிக்கையை கண்டித்து சேலத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
4. சேலத்தில் அய்யப்ப பக்தர்கள் உண்ணாவிரதம் கல்லூரி மாணவிகள் விளக்கேற்றி உறுதிமொழி
சபரிமலை விவகாரத்தில் தீர்ப்பை மறுசீராய்வு செய்ய கோரி சேலத்தில் அய்யப்ப பக்தர்கள் உண்ணாவிரதம், கல்லூரி மாணவிகள் விளக்கை கையில் ஏந்தி போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
5. சேலத்தில் கள்ளக்காதல் விவகாரத்தில் ஓட்டல் தொழிலாளியை தாக்கிய சப்-இன்ஸ்பெக்டர் இடமாற்றம்
சேலத்தில் கள்ளக்காதல் விவகாரத்தில் ஓட்டல் தொழிலாளியை தாக்கிய சப்-இன்ஸ்பெக்டரை இடமாற்றம் செய்து போலீஸ் கமிஷனர் அதிரடியாக உத்தரவிட்டார்.