மாவட்ட செய்திகள்

மகளை திருமணம் செய்து கொடுக்க வற்புறுத்தியதால் கள்ளக்காதலி தூக்குப்போட்டு தற்கொலை ஆவடி போலீஸ்காரர் மீது புகார் + "||" + Because she was forced to marry the daughter A girlfriend committed suicide by hanging herself Complain against Avadi policeman

மகளை திருமணம் செய்து கொடுக்க வற்புறுத்தியதால் கள்ளக்காதலி தூக்குப்போட்டு தற்கொலை ஆவடி போலீஸ்காரர் மீது புகார்

மகளை திருமணம் செய்து கொடுக்க வற்புறுத்தியதால் கள்ளக்காதலி தூக்குப்போட்டு தற்கொலை ஆவடி போலீஸ்காரர் மீது புகார்
மகளை திருமணம் செய்து கொடுக்க வற்புறுத்தியதால் கள்ளக்காதலி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுதொடர்பாக ஆவடி போலீஸ்காரர் மீது போலீசில் புகார் செய்யப்பட்டது.
வாலாஜா,

வேலூர் மாவட்டம், வாலாஜாவை அடுத்த மேல்புதுப்பேட்டை காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ரமேஷ்குமார். இவரது மனைவி கல்பனா (வயது 34). இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். கணவன் - மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கணவர் ரமேஷ்குமாரை பிரிந்து மகளுடன் கல்பனா தனியாக வசித்து வந்தார்.


இந்த நிலையில் கல்பனாவிற்கு காவேரிப்பாக்கத்தை அடுத்த பெரிய கிராமத்தை சேர்ந்த பரதேசி என்பவரது மகன் குமரேசனுடன் (28) பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. குமரேசன் சென்னை ஆவடியில் உள்ள தமிழ்நாடு சிறப்பு காவல்படையில் கடந்த 2 ஆண்டுகளாக வேலை செய்து வருகிறார். நாளடைவில் கல்பனாவின் மகள் மீது விருப்பப்பட்ட குமரேசன், கல்பனாவிடம் உனது மகளை எனக்கு திருமணம் செய்து வை என கூறி வற்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது.

தொடர்ந்து கடந்த 10-ந் தேதி செல்போன் மூலம் தொடர்பு கொண்டு குமரேசன் மீண்டும் கல்பனாவிடம் மகளை தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு கேட்டதாக தெரிகிறது.

இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த கல்பனா தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், கல்பனா ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து கல்பனாவின் மகள் வாலாஜா போலீசில் கொடுத்துள்ள புகாரில், தனது தாய் தற்கொலை செய்து கொண்டதற்கு குமரேசனே காரணம் என்று கூறியுள்ளார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.