6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாமக்கல்லில் போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்


6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாமக்கல்லில் போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 13 Oct 2018 4:00 AM IST (Updated: 12 Oct 2018 11:11 PM IST)
t-max-icont-min-icon

கோரிக்கைகளை வலியுறுத்தி நாமக்கல்லில் அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நாமக்கல்,

நாமக்கல் அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சி.ஐ.டி.யு. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு சி.ஐ.டி.யு. மாவட்டத் தலைவர் சிங்காரம் தலைமை தாங்கினார். சேலம் கோட்ட தலைவர் செம்பான், மத்திய சங்க உதவி செயலாளர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் சேலம் கோட்ட பொதுச்செயலாளர் கிருஷ்ணமூர்த்தி கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தின் நோக்கம் குறித்து விளக்கி பேசினார்.

அதைத்தொடர்ந்து நடந்த ஆர்ப்பாட்டத்தில், ஊழியர்களை கொத்தடிமைகள் போல் நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஊழியர்களுக்கு ஆப்சென்ட் போட்டு சம்பளம் பிடித்தம் செய்யப்படுவதை கண்டித்தும், பணிமனை வளாகத்தின் அருகே இருக்கும் சாக்கடை கால்வாய்களை சுத்தம் செய்து கொசுத்தொல்லையில் இருந்து ஊழியர்களை பாதுகாத்திட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து கோஷங்கள் எழுப்பினர். முடிவில் நாமக்கல் கிளை உதவி தலைவர் பாண்டியன் நன்றி கூறினார்.

Next Story