மாவட்ட செய்திகள்

இளம்பெண் கற்பழித்துக் கொலையா? போலீஸ் விசாரணை + "||" + Young woman raped Police investigation

இளம்பெண் கற்பழித்துக் கொலையா? போலீஸ் விசாரணை

இளம்பெண் கற்பழித்துக் கொலையா? போலீஸ் விசாரணை
வண்டலூர் மேம்பாலத்தின் கீழ் உயிருக்கு போராடிய இளம்பெண்ணை போலீசார் மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர் பரிதாபமாக இறந்தார். அவர் கற்பழித்து கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
வண்டலூர்,

வண்டலூர் ரெயில் நிலையம் மற்றும் பஸ் நிலையம் பகுதியில் வசிப்பவர் விஜயலட்சுமி(வயது25). இவர் வண்டலூர் பகுதியில் உள்ள குப்பை தொட்டிகளில் பிளாஸ்டிக் பொருட்களை சேகரித்து அதன் மூலம் அன்றாட வாழ்க்கையை நடத்தி வந்தார்.


இந்தநிலையில் நேற்று காலை வண்டலூர் மேம்பாலத்தின் கீழ் விஜயலட்சுமி படுகாயத்துடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். இதனைப்பார்த்த அப்பகுதி மக்கள் ஓட்டேரி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

உடனே விரைந்து வந்த போலீசார் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த விஜயலட்சுமியை மீட்டு குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர் நேற்று மதியம் பரிதாபமாக இறந்தார்.

போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் ‘விஜயலட்சுமியின் பிறப்பு உறுப்பில் கம்பியால் குத்தப்பட்டு இருந்தது. இதனால் அவரை மர்ம நபர்கள் யாராவது கற்பழித்துவிட்டு அடித்துக்கொலை செய்து இருக்கலாம்’ என்று சந்தேகம் போலீசாருக்கு ஏற்பட்டுள்ளது.

விஜயலட்சுமியின் பிரேதபரிசோதனை முடிவு வந்த பிறகு தான், அவர் எப்படி கொலை செய்யப்பட்டார்? என்பது தெரியவரும்.

இதுகுறித்து ஓட்டேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் வண்டலூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. இளம்பெண்ணிடம் நகை பறிப்பு: மோட்டார்சைக்கிளில் வந்த மர்ம ஆசாமிகள் கைவரிசை
இளம்பெண்ணிடம், மோட்டார்சைக்கிளில் வந்த மர்ம ஆசாமிகள் தங்க சங்கிலியை பறித்து சென்றனர்.
2. தஞ்சை அருகே இளம்பெண்ணை கடத்தி பாலியல் பலாத்காரம்; டிரைவர் கைது
தஞ்சை அருகே இளம்பெண்ணை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
3. கஜா புயலால் தென்னை மரங்கள் சேதம் மன வேதனையில் இளம்பெண் தற்கொலை
கஜா புயலால் தென்னை மரங்கள் சேதம் மன வேதனையில் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை.
4. இளம்பெண்ணை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் வாலிபருக்கு 10 ஆண்டு சிறைதண்டனை - சேலம் கோர்ட்டு தீர்ப்பு
இளம்பெண்ணை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் வாலிபருக்கு 10 சிறைதண்டனை விதித்து சேலம் கோர்ட்டு தீர்ப்பளித்தது.
5. குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து இளம்பெண் கற்பழிப்பு: ஜவுளி கடை உரிமையாளர் மீதும் நடவடிக்கை
குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து பெண்ணை கற்பழித்த வழக்கில் ஜவுளி கடை உரிமையாளர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு அமைப்பினர் வலியுறுத்தியுள்ளனர்.