கீழக்கரையில் 100 கிலோ கடல் அட்டைகளுடன் 3 பேர் கைது


கீழக்கரையில் 100 கிலோ கடல் அட்டைகளுடன் 3 பேர் கைது
x
தினத்தந்தி 13 Oct 2018 3:00 AM IST (Updated: 13 Oct 2018 1:33 AM IST)
t-max-icont-min-icon

கீழக்கரையில் கடல் அட்டைகளுடன் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

கீழக்கரை,

கீழக்கரை பகுதியில் இருந்து இலங்கைக்கு கடத்த கடல் அட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து வன அலுவலர் சிக்கந்தர் பாட்சா தலைமையில் வனவர் சுதாகர், வன காப்பாளர் ராஜேந்திரன் ஆகியோர் அங்குசென்று மீனவர் குப்பத்தை சேர்ந்த ரவி (வயது44), இளையராஜா (28), கீழக்கரை முகமதுரியாஸ் (40) ஆகிய 3 பேரை பிடித்து 100 கிலோ கடல்அட்டைகளை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக வழக்குப்பதிந்து 3 பேரையும் கைது செய்தனர். மேலும் இதுதொடர்பாக பரதர்தெரு அக்பர்அலியை வனத்துறையினர் தேடி வருகின்றனர்.


Next Story