மாவட்ட செய்திகள்

மழைக்காலங்களில் வீணாக செல்லும் உபரிநீரை ஏரி, குளங்களில் சேகரிக்க கோரி ஆர்ப்பாட்டம் - கொ.ம.தே.க. + "||" + Demonstrate demanding to collect water in vain

மழைக்காலங்களில் வீணாக செல்லும் உபரிநீரை ஏரி, குளங்களில் சேகரிக்க கோரி ஆர்ப்பாட்டம் - கொ.ம.தே.க.

மழைக்காலங்களில் வீணாக செல்லும் உபரிநீரை ஏரி, குளங்களில் சேகரிக்க கோரி ஆர்ப்பாட்டம் - கொ.ம.தே.க.
மழைக்காலங்களில் வீணாக செல்லும் உபரிநீரை ஏரி, குளங்களில் சேகரிக்க கோரி கொ.ம.தே.க. சார்பில் ஈரோட்டில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஈரோடு,

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் சார்பில் நேற்று ஈரோடு வீரப்பன்சத்திரம் பஸ் நிறுத்தம் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் மாநில இளைஞர் அணி செயலாளர் எஸ்.சூரியமூர்த்தி, தொழிற்சங்க தலைவர் எஸ்.ஜெகநாதன் ஆகியோர் தலைமை தாங்கினார்கள். கொங்குநாடு காக்கும் கரங்கள் அறக்கட்டளை தலைவர் காசியண்ணன், மாநில மருத்துவர் அணி செயலாளர் டாக்டர் ஆர்.சதாசிவம், இலக்கிய அணி செயலாளர் தமிழரசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில், பாண்டியாறு–புன்னம்புழா திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். மேட்டூர் உபரிநீர் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். அவினாசி–அத்திக்கடவு திட்டப்பணிகளை உடனடியாக தொடங்க வேண்டும். மணியாச்சி–வழுக்குப்பாறை திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். டி.என்.பாளையம் வேதபாறை தடுப்பணை திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுப்பப்பட்டன. மேலும், மழைக்காலங்களில், மேட்டூர், பவானிசாகர், அமராவதி அணைகளில் தண்ணீர் நிரம்பி உபரியாக ஆற்றில் சென்று கடலில் வீணாக கலக்கும் தண்ணீரை ஏரி, குளம், குட்டைகளில் சேகரிக்க வேண்டும்.

ஈரோடு மாவட்டத்தில் அனைத்து ஏரி, குளம், குட்டைகளை நிரப்ப வேண்டும். புதிதாக ஏரி, குளம், குட்டைகளை உருவாக்க வேண்டும். பொதுமக்களுக்கு தடையில்லாத குடிதண்ணீர் வழங்கவும், விவசாயத்துக்கு தேவையான தண்ணீர் குறையின்றி வழங்கவும் தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலியுறுத்தப்பட்டது.

இந்த கோரிக்கைகளை வலியுத்தி கோ‌ஷங்களும் எழுப்பப்பட்டன.

ஆர்ப்பாட்டத்தில் மாநில இளைஞர் அணி செயலாளர் எஸ்.சூரியமூர்த்தி பேசும்போது, ‘விவசாயிகளின் பிரச்சினைகளை முன்னெடுத்து போராடும் கட்சிகளில் முன்னிலையில் இருப்பது கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியாகும். விவசாயிகளுக்கு ஆதாரமாக இருக்கும் தண்ணீர் முறையாக கிடைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இங்கே நாங்கள் வைத்திருக்கும் கோரிக்கைகள் நியாயமானவை. இந்த கோரிக்கைகள் குறித்து ஊடகங்கள் விவாதம் நடத்த முன்வரவேண்டும். தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இந்த ஆர்ப்பாட்டம் நடக்கிறது. நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை என்றால் அரசு அலுவலகங்களில் முற்றுகை போராட்டம் நடைபெறும்’ என்றார்.

ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட அவைத்தலைவர் சென்னியப்பன், மாவட்ட செயலாளர்கள் பிரபாகரன், சிவராஜ், துரைராஜா, சாமிநாதன், முத்துசாமி, கொங்கு கோவிந்தராஜ், ஈஸ்வரமூர்த்தி உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.தொடர்புடைய செய்திகள்

1. விருதுநகர் மாவட்டத்தில் வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றிய பட்டாசு ஆலை தொழிலாளர்கள்
விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு ஆலைகளை திறக்க கோரியும் நிவாரணம் கேட்டும் தொழிலாளர்கள் வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றினர். 28 இடங்களில் ஆர்ப்பாட்டமும் நடத்தினார்கள்.
2. ஆர்ப்பாட்டம், பொதுக்கூட்டம் நடத்த அனுமதிக்க வேண்டும்; போலீஸ் சூப்பிரண்டிடம் நாம் தமிழர் கட்சியினர் மனு
நாம் தமிழர் கட்சியின் மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் சீதாலட்சுமி தலைமையில் கட்சியினர் ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசனிடம் நேற்று மனு கொடுத்தனர்.
3. திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகம் முன் 8 வழிச்சாலை திட்ட எதிர்ப்பாளர்கள் ஆர்ப்பாட்டம் முதல்–அமைச்சர் மீது குற்றச்சாட்டு
சென்னை–சேலம் இடையே 8 வழிச்சாலை திட்டத்துக்கு இடைக்கால தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில் திட்டத்துக்கு நில ஆர்ஜிதம் செய்யும் நடவடிக்கையை கண்டித்து திட்ட எதிர்ப்பாளர்கள் திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
4. உதவி கலெக்டர் அலுவலகங்கள் முன்பு கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
கிராம நிர்வாக அலுவலர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உதவி கலெக்டர் அலுவலகங்கள் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
5. ஈரோட்டில் கிராம நிர்வாக அதிகாரிகள் ஆர்ப்பாட்டம்
ஈரோட்டில் கிராம நிர்வாக அதிகாரிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.