தனுஷ்கோடியில் தடையைமீறி கடலில் குளிக்கும் சுற்றுலா பயணிகள்; போலீசாருடன் இளைஞர்கள் வாக்குவாதம்


தனுஷ்கோடியில் தடையைமீறி கடலில் குளிக்கும் சுற்றுலா பயணிகள்; போலீசாருடன் இளைஞர்கள் வாக்குவாதம்
x
தினத்தந்தி 14 Oct 2018 4:15 AM IST (Updated: 14 Oct 2018 12:20 AM IST)
t-max-icont-min-icon

தனுஷ்கோடி பகுதியில் தடையை மீறி கடலில் சுற்றுலா பயணிகள் குளித்துவருகின் றனர். அவர்கைள கடலோர போலீசாரிடம் இளைஞர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

ராமேசுவரம்,

ராமேசுவரம் அருகே தனுஷ்கோடி கடல்பகுதி எப்போதும் கொந்தளிப்புடன் காணப்ப டும். இதனால் பாதுகாப்பு கருதி தனுஷ்கோடி கடல் பகுதியில் சுற்றுலா பயணிகள் இறங்கி குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து கடலோர போலீசார் சார்பில் அரிச்சல்முனை கடற்கரையில் பல இடங்களில் எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டுஉள்ளது.

இங்கு வரும் சுற்றுலா பயணிகள் கடலை பார்க்கும் ஆர்வத்திலும்,மகிழ்ச்சியிலும் தடையை மீறி கடலில் இறங்கி குளித்து வருகின்றனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு கூட கோவையை சேர்ந்த கல்லூரி மாணவர் ஒருவர் தனுஷ்கோடி கடலில் குளித்த போது அலையில் சிக்கி உயிரிழந்தார். இதன்காரணமாக ராமேசுவரம் கடலோர போலீசார் அரிச்சல்முனை கடற்கரை பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வ ருகின்றனர்.

இந்நிலையில் தனுஷ்கோடி அரிச்சல்முனை பகுதிக்கு நேற்று ஏராளமான சுற்றுலாபயணிகள் வருகை தந்தனர். இவ்வாறு வருகை தந்த சுற்றுலா பயணிகள் மற்றும் இளைஞர்கள் பலர் தடையை மீறி கடலில் இறங்கி குளித்து கொண்டிருந் தனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த கடலோர போலீசார் தனுஷ்கோடி கடல் ஆபத்தானது, கடலில் இறங்கி யாரும் குளிக்கக்கூடாது என இது எச்சரிக்கை செய்தனர். அப்போது இளைஞர்கள் சிலர் தொடர்ந்து து கடலில் குளி த்து கொண்டிருந்தனர்.கடலில் குளிக்கத் தான் செய்வோம் அதை தடுக்க உங்களுக்கு அதிகாரம் கிடையாது என கூறியதுடன் கடலோர போலீசாரிடம் கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.

இது பற்றி தகவல் கிடைத்ததும் கடலோரபோலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் உள்ளிட்ட கடலோர போலீசார் அரிச்சல்முனை பகுதிக்கு விரைந்து சென்று கடலில் குளித்து கொண்டிருந்த இளைஞர்களிடம் தவறை சுட்டிக்காட்டி கடலில் குளிக்க வேண்டாம்,உங்கள் உயிர் பாதுகாப்புக்காகவே சொல்கிறோம் என தெரிவித்தனர். அதை கேட்காத இளைஞர்கள் சிலர் போலீசாரை மரியாதை குறைவாக பேசி மீண் டும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இச்சம்பவம் அங்கு கூடியிருந்தவர்கள் மத்தியில் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதையடுத்து போலீசார் அந்த இளைஞர்களை பிடித்து வாகனத்தில் ஏற்றி காவல் நிலையம் கொண்ட சென்று விசாரணை நடத்த முடிவு செய்தனர். அப்போது இளை ஞர்களின் பெற்றோர்கள் மற்றும் குடும்பத்தினர் மன்னிப்பு கேட்டதை தொடர்ந்து போலீசார் இளைஞர்களுக்கு அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.

தனுஷ்கோடியை காண வரும் சுற்றுலா பயணிகள் கடலில் இறங்கி குளிப்பதை தாங்களாகவே முற்றிலும் தவிர்த்தால் மட்டுமே உயிர் இழப்பை முழுமையாக தடுக்க முடியும் இதை கடைபிடிக்க அனைவரும் முன்வர வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாகும்.


Next Story