பா.ஜ.க.வை தவிர்த்து யாரும் அரசியல் நடத்த முடியாது - பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி


பா.ஜ.க.வை தவிர்த்து யாரும் அரசியல் நடத்த முடியாது - பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி
x
தினத்தந்தி 14 Oct 2018 4:00 AM IST (Updated: 14 Oct 2018 1:44 AM IST)
t-max-icont-min-icon

பா.ஜ.க.வை தவிர்த்து யாரும் அரசியல் நடத்த முடியாது என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

புதுச்சேரி,

மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நேற்று கடலூர் செல்லும் வழியில் புதுச்சேரிக்கு வந்தார். அவரை மாநில பா.ஜ.க. தலைவர் சாமிநாதன் தலைமையில் நிர்வாகிகள் வரவேற்றனர். இதையடுத்து பா.ஜ.க. தலைமை அலுவலகத்தில் நிருபர்களிடம் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறியதாவது:–

நாட்டின் பிரதமராக மோடி தலைமையேற்ற பிறகு ஐக்கிய நாடுகளின் மனித உரிமை கவுன்சிலிங்கில் உறுப்பினராக பெரும்பான்மையோடு தேர்வு செய்யப்பட்டுள்ளது.

புதுவையில் கயானா நாட்டு பிரதமர் மோசஸ் வீராசாமி நாகமுத்துவை சந்திக்க வாய்ப்பு கிடைத்தது. அப்போது அவர் இந்தியாவின் ஒத்துழைப்பு கேட்டுள்ளார். இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட துறைக்கு தெரிவிப்பேன்.

தமிழகத்தில் கடந்த 50 ஆண்டுகளில் அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் மாறிமாறி குறைச்சொல்லி வந்தன. தற்போது எது நடந்தாலும் பாரதீய ஜனதாவின் பெயரை சொல்லாமல் யாரும் அரசியல் நடத்த முடியாது.

வருகிற நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் அதிகப்படியான இடங்களை பெறும் வகையில் கூட்டணி அமைப்போம். கமல் கட்சி ஆரம்பித்துள்ளார். ரஜினி கட்சி ஆரம்பிக்க உள்ளதாக தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஏராளமான நடிகர்கள் உள்ளனர். அனைவரும் கட்சி தொடங்கலாம். கூட்டணி பற்றி தெரிவிக்கலாம். புதுவை மாநில கூட்டணி குறித்து தலைவர் தெரிவிப்பார்.

சபரிமலைக்கு பெண்கள் செல்லாம் என்ற சட்டவிதிமுறை எதுவும் செய்ய முடியாது. சபரிமலை அய்யப்பனை வழிபட விதிமுறைகள் உள்ளது. அதனை யாருக்கும் சொல்லி புரிய வைக்க முடியாது. அனுபவம் தான் தெரியப்படுத்தும். பெண்களை வலுக்கட்டாயமாக அனுப்பி வைக்க முடியாது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story