மாவட்ட செய்திகள்

தமிழக மக்கள் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக வாக்களிக்க தயாராகி விட்டனர் + "||" + Tamilnadu people are ready to vote against the federal and state governments

தமிழக மக்கள் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக வாக்களிக்க தயாராகி விட்டனர்

தமிழக மக்கள் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக வாக்களிக்க தயாராகி விட்டனர்
வருகிற தேர்தலில் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக வாக்களிக்க தமிழக மக்கள் தயாராகி விட்டனர் என்று அகில இந்திய காங்கிரஸ் கட்சி செயலாளர் ஸ்ரீவெல்ல பிரசாத் கூறினார்.
நாமக்கல்,

நாமக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த காங்கிரஸ் கட்சி செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் நேற்று நாமக்கல்லில் நடைபெற்றது. கூட்டத்துக்கு முன்னாள் எம்.பி. ராணி தலைமை தாங்கினார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி பொதுச்செயலாளர் ராஜேந்திரன், மாநில துணைத்தலைவர் சுபசோமு ஆகியோர் முன்னிலை வகித்தனர். நாமக்கல் கிழக்கு மாவட்ட தலைவர் ஷேக் நவீத், மேற்கு மாவட்ட தலைவர் தனகோபால் ஆகியோர் வரவேற்று பேசினர்.


இதில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் செயலாளரும், தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளருமான ஸ்ரீவெல்ல பிரசாத் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது கூறியதாவது :-

கடந்த 2014-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா பல்வேறு பொய் பிரசாரங்களை செய்து வெற்றிபெற்றது. அவர்கள் தந்த வாக்குறுதியில் பொதுமக்கள் ஒவ்வொருவர் கணக்கிலும் ரூ.15 லட்சம் கொடுப்பதாக கூறினார்கள், இதுவரை ஒரு பைசாகூட தரவில்லை.ஆண்டுதோறும் 2 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதாக கூறினார்கள். தற்போது இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் பெரும் பிரச்சினையாக உள்ளது. பண மதிப்பிழப்பு மற்றும் ஜி.எஸ்.டி. நடவடிக்கைக்கு பிறகு பல சிறுதொழில்கள் பாதிக்கப்பட்டு உள்ளன.

தமிழகத்தில் நடைபெறும் ஊழல் நிறைந்த மாநில அரசை மத்தியில் ஆளும் பா.ஜனதா கட்சி பின்னால் இருந்து இயக்கி வருகிறது. கடந்த 10 நாட்களாக தமிழகத்தில் பல்வேறு இடங்களுக்கும் சுற்றுப்பயணம் செய்து உள்ளேன். பொதுமக்கள் மத்தியிலும், மாநிலத்திலும் ஆளுங்கட்சி மீது கடும் அதிருப்தியில் உள்ளனர். இதனால் அனைத்து தரப்பு மக்களும் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக வாக்களிக்க தயாராகி விட்டனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் நாமக்கல் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர்கள் ஜி.ஆர்.சுப்பிரமணியம், சீனிவாசன், கிழக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் மெய்ஞானமூர்த்தி, நகர காங்கிரஸ் தலைவர் ராம்குமார், வட்டார காங்கிரஸ் தலைவர்கள் இளங்கோ, குப்புசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


தொடர்புடைய செய்திகள்

1. கஜா புயலால் வீடுகள் பாதிப்புக்கு நிவாரணமாக 64 ஆயிரத்து 58 பேரின் வங்கி கணக்கில் ரூ.32 கோடி செலுத்தப்பட்டுள்ளது
புதுக்கோட்டை மாவட்டத்தில் வீடுகள் பாதிக்கப்பட்ட 64 ஆயிரத்து 58 பேரின் வங்கி கணக்கில் ரூ.32 கோடி நிவாரணம் செலுத்தப்பட்டு உள்ளது என்று அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.
2. புயலால் சேதமடைந்த படகுகளுக்கு கூடுதல் நிவாரணம் வழங்க வேண்டும்
புயலால் சேதமடைந்த படகுகளுக்கு கூடுதல் நிவாரணம் வழங்க வேண்டும் என ஏ.ஐ.டி.யூ.சி. மீனவ தொழிலாளர் சங்க கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
3. கோரிக்கைகளை வலியுறுத்தி அடுத்த மாதம் ரெயில்வே தொழிற்சங்கத்தினர் பாராளுமன்றம் முன்பு ஆர்ப்பாட்டம்
கோரிக்கைகளை வலியுறுத்தி அடுத்த மாதம் பாராளுமன்றம் முன்பு ரெயில்வே தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளதாக எஸ்.ஆர்.இ.எஸ். பொதுச்செயலாளர் சூர்யபிரகாசம் தெரிவித்தார்.
4. தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்றால் புகார் தெரிவிக்கலாம் கலெக்டர் சாந்தா தகவல்
தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டால் புகார் தெரிவிக்கலாம் என்று மாவட்ட கலெக்டர் சாந்தா கூறினார்.
5. கன்னியாகுமரியில் ஜெயலலிதாவுக்கு மணிமண்டபம் அகஸ்தீஸ்வரம் ஒன்றிய அ.தி.மு.க. கூட்டத்தில் தீர்மானம்
கன்னியாகுமரியில் ஜெயலலிதாவுக்கு மணிமண்டபம் அமைக்க வேண்டும் என்று அகஸ்தீஸ்வரம் ஒன்றிய அ.தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.