மாவட்ட செய்திகள்

திட்டக்குடி அருகே சோகம்: குழந்தையை கொன்று கணவன்-மனைவி தற்கொலை - காரணம் என்ன? போலீசார் விசாரணை + "||" + Tragedy near the plot Killing child and husband-wife suicide - What is the reason? Police investigation

திட்டக்குடி அருகே சோகம்: குழந்தையை கொன்று கணவன்-மனைவி தற்கொலை - காரணம் என்ன? போலீசார் விசாரணை

திட்டக்குடி அருகே சோகம்: குழந்தையை கொன்று கணவன்-மனைவி தற்கொலை - காரணம் என்ன? போலீசார் விசாரணை
திட்டக்குடி அருகே பெண் குழந்தையை கொன்று கணவன், மனைவி தற்கொலை செய்து கொண்டனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சோக சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-
திட்டக்குடி, 

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த இடைச்செருவாய் கிராமத்தை சேர்ந்தவர் மருதமுத்து மகன் பிரகாஷ்(வயது 29). இவருடைய மனைவி கீரனூரை சேர்ந்த உஷா(25). இவர்கள் 2 பேரும் காதலித்து கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். காதல் திருமணத்தில் வாழ்க்கையை தொடங்கிய இவர்களுக்கு 2 வயதில் பிரதிஷா என்ற பெண் குழந்தை இருந்தது.

பிரகாஷ் குடும்பத்தோடு குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் தங்கி இருந்து அதே பகுதியில் ஓட்டல் வைத்து நடத்தி வந்தார்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரகாஷ் தனது மனைவி உஷா, மகள் பிரதிஷா ஆகியோருடன் சொந்த ஊரான இடைச்செருவாய்க்கு வந்தார். அங்கே தங்கி மாமனார் வீடான கீரனூருக்கும் அருகே உள்ள உறவினர் வீடுகளுக்கும் சென்று வந்தார்.

இந்த நிலையில் இடைச்செருவாயில் உள்ள வீட்டில் தங்கியிருந்த பிரகாசின் வீடு நேற்று காலையில் நீண்ட நேரமாக திறக்கப்படாமல் பூட்டியே கிடந்தது. இதனால் சந்தேகமடைந்த அக்கம், பக்கத்தினர் வீட்டு ஜன்னல் வழியாக உள்ளே எட்டிப்பார்த்தனர். அப்போது பிரகாஷ், உஷா ஆகியோர் வீட்டில் உள்ள அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தனர். இதையடுத்து அக்கம்பக்கத்தினர் வீட்டு கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.

அப்போது அவர்கள் இருவரது கை மணிக்கட்டு நரம்புகளும் அறுக்கப்பட்டு ரத்தம் வடிந்த நிலையில் கிடந்தனர். அவர்களது உடல்களுக்கு கீழே, குழந்தை பிரதிஷா கை மணிக்கட்டு நரம்பு அறுக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தாள். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள், இது பற்றி திட்டக்குடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சுதாகர், சப்-இன்ஸ்பெக்டர் சீனிவாசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து இறந்து கிடந்தவர்களின் உடல்களை பார்வையிட்டு அங்கிருந்தவர் களிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில், குழந்தையை கொன்று விட்டு கணவனும், மனைவியும் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

ஆனால் அவர்கள் இறந்ததற்கான காரணம் என்ன? என்பது பற்றி உடனடியாக தெரியவில்லை. இதையடுத்து 3 பேரின் உடல்களையும் கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கடன் தொல்லை காரணமா? அல்லது வேறு ஏதேனும் காரணமான என பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர். குழந்தையை கொன்று விட்டு கணவன்-மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. மதுரை அருகே, ஆன்லைனில் சீட்டு விளையாடி பணத்தை இழந்ததால் தம்பதி தற்கொலையா?
மதுரை அருகே ஒரே கயிற்றில் தூக்கிட்டு கணவன், மனைவி தற்கொலை செய்துகொண்டனர். ஆன்லைனில் சீட்டு விளையாடி பணத்தை இழந்ததால்தான் அவர்கள் தற்கொலை செய்தார்களா? என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
2. மகன், மகளை கொன்றுவிட்டு மனைவி தற்கொலை செய்த வழக்கில் கணவர் கைது
சென்னை வளசரவாக்கம், மகன், மகளை கொன்றுவிட்டு மனைவி தற்கொலை செய்த வழக்கில் கணவர் கைது செய்துகொண்டார்.
3. களியக்காவிளை அருகே கணவன்-மனைவிக்கு அரிவாள் வெட்டு அண்ணன், தங்கையை போலீஸ் தேடுகிறது
களியக்காவிளை அருகே கணவன்-மனைவியை அரிவாளால் வெட்டிய அண்ணன் மற்றும் தங்கையை போலீஸ் தேடுகிறது.