குறைந்த விலைக்கு பெட்ரோல் வழங்குவதாக கூறி பேரழிவு திட்டங்களை நியாயப்படுத்த மத்திய அரசு முயற்சி
குறைந்த விலைக்கு பெட்ரோல் வழங்குவதாக கூறி பேரழிவு திட்டங்களை நியாயப்படுத்த மத்திய அரசு முயற்சி மேற்கொண்டு வருவதாக பி.ஆர்.பாண்டியன் குற்றம் சாட்டினார்.
திருத்துறைப்பூண்டி,
தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன், திருத்துறைப்பூண்டியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
காவிரி டெல்டாவில் பேரழிவை ஏற்படுத்தும் ஹைட்ரோ கார்பன் திட்டம், மீத்தேன் திட்டத்துக்கு மக்களின் எதிர்ப்புகளை மீறி மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது. இதன் காரணமாக போராட்டங்கள் தீவிரமடைந்து வரும் நிலையில் பேரழிவு திட்டங்களுக்கு ஆதரவாக மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் மயிலாடுதுறையில் பேசி உள்ளார். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
வெணிசுலா போன்ற எண்ணெய் வளம் கொண்ட நாடுகள் இந்திய நாணய மதிப்புக்கு பெட்ரோல் தர தயாராக உள்ளன. ஆனால் இந்திய நாணயத்தை கொடுத்து நேரடியாக எண்ணெய் வாங்க துணிவு இல்லாத மத்திய அரசு, குறைந்த விலைக்கு பெட்ரோல் வழங்குவதாக கூறி பேரழிவு திட்டங்களை நியாயப்படுத்த முயற்சி மேற்கொண்டு வருகிறது. இது மத்திய அரசின் மோசடி நடவடிக்கையாகும்.
இந்தியாவில் 80 சதவீதம் பேர் விவசாயத்தை நம்பி வாழ்ந்து வரும் நிலையில், வாழ்வாதாரத்தை அழித்து விட்டு குறைந்த விலைக்கு பெட்ரோல், டீசல் தருவதாக சொல்வதும், இயற்கை வளங்கள் எடுப்பதை மறுப்பதால் தான் பெட்ரோல் விலை உயர்வதாகவும் கூறுவதும் பொய் பிரசாரம் ஆகும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது ஒருங்கிணைப்புக்குழு மாநில துணை செயலாளர் செந்தில்குமார், திருவாரூர் மாவட்ட கவுரவ தலைவர் செல்வராஜ், திருத்துறைப்பூண்டி ஒன்றிய செயலாளர் பாலமுருகன், தலைவர் அருள் ஆகியோர் உடன் இருந்தனர்.

Related Tags :
Next Story