பனைக்குளம் நதிப்பாலத்தில் பெண்ணிடம் 9 பவுன் நகை பறிப்பு; தடுக்க முயன்ற கணவருக்கு அரிவாள் வெட்டு


பனைக்குளம் நதிப்பாலத்தில் பெண்ணிடம் 9 பவுன் நகை பறிப்பு; தடுக்க முயன்ற கணவருக்கு அரிவாள் வெட்டு
x
தினத்தந்தி 16 Oct 2018 4:30 AM IST (Updated: 16 Oct 2018 1:24 AM IST)
t-max-icont-min-icon

பனைக்குளம் நதிப்பாலத்தில் மர்மநபர்கள் பெண்ணிடம் 9 பவுன் நகையை மர்மநபர்கள் பறித்துச்சென்றுவிட்டனர். தடுக்க முயன்ற கணவரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.

பனைக்குளம்,

ராமநாதபுரம் அழகன்குளம் கிராமத்தை சேர்ந்த மகன் திருமலை. இவர் மனைவியுடன் மோட்டார் சைக்கிளில் ராமநாதபுரம் சென்றுவிட்டு பனைக்குளம் நதிப்பாலம் வழியாக சென்றுகொண்டு இருந்தார். அப்போது அந்தவழியாக 3 மர்மநபர்கள் வழிமறிந்து திருமலை மனைவி அணிந்து இருந்த நகையை பறிக்க முயன்றனர்.

இதை தடுக்க முயன்ற திருமலையை அரிவாளால் வெட்டிவிட்டு 9 பவுன் நகையை பறித்துக்கொண்டு மர்மநபர்கள் தப்பிச்சென்றுவிட்டனர். பின்னர் அந்த வழியாக வந்தவர்கள் ஆம்புலன்சு மூலம் திருமலையை சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்த புகாரின்பேரில் போலீஸ் துணை சூப்பிரண்டு நடராஜன் மற்றும் உச்சிப்புளி போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் சம்பவம் தொடர்பாக உச்சிப்புளி போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய மர்ம நபர்களை தேடிவருகின்றனர்.

இந்த பகுதியில் அடிக்கடி வழிப்பறி சம்பவம் நடப்பதால் அந்த பகுதியினர் அச்சம் அடைந்துள்ளனர். மேலும் இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story