வெள்ளாற்றில் மணல் அள்ள அனுமதி மறுப்பு: மாட்டுவண்டி உரிமையாளர்கள் போராட்டம்


வெள்ளாற்றில் மணல் அள்ள அனுமதி மறுப்பு: மாட்டுவண்டி உரிமையாளர்கள் போராட்டம்
x
தினத்தந்தி 16 Oct 2018 4:30 AM IST (Updated: 16 Oct 2018 2:09 AM IST)
t-max-icont-min-icon

அன்னவாசல் அருகே தெற்கு வெள்ளாற்றில் மணல் அள்ள அனுமதி மறுக்கப்பட்டதால் மாட்டுவண்டி உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அன்னவாசல்,

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அருகே உள்ள கிளிக்குடி கூடலூர் கிராமத்தில் உள்ள தெற்கு வெள்ளாற்றில் அரசுக்கு சொந்தமான மணல் குவாரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த மணல் குவாரியில் ஒப்பந்த அடிப் படையில் தற்போது மணல் எடுக்கப்பட்டு வரும் நிலையில் வழக்கம்போல் மாட்டுவண்டிகளில் மணல் எடுக்க சென்றவர்களை மணல் எடுக்கக் கூடாது என்று அதிகாரிகள் மறுப்பு தெரிவித்தனர். இதனால் மணல் அள்ள சென்ற 30-க்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகளை ஆற்றில் நிறுத்தி அதன் உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் ஒரு நாளைக்கு ஒருமுறை மட்டுமே மணல் எடுத்து கொள்வோம் என்று எழுத்துப்பூர்வமான உத்தரவாதம் தரவேண்டும் என அதிகாரிகள் கூறினர். பின்னர் எழுத்து பூர்வமாக உத்தரவாதத்தை வாங்கி கொண்டு மணல் எடுத்து செல்ல அனுமதித்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், “அரசின் விதி முறைகளின்படி ஒரு நாளைக்கு ஒருமுறை மட்டுமே மாட்டு வண்டிகளில் மணல் எடுக்க அனுமதி உள்ளது. ஆனால் சில மாட்டு வண்டி உரிமையாளர்கள் விதிமுறைகளை மீறி பலமுறை மணல் எடுத்து அதனை ஒரு இடத்தில் குவித்து வைத்து லாரிகளில் ஏற்றி விற்பனை செய்து வருகின்றனர். மணல் அள்ளுவதை வரைமுறை படுத்துவதற்காக மாட்டு வண்டிகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது” என்றார்.

Next Story